என் மலர்
திருவண்ணாமலை
- கலெக்டர் முருகேஷ் பேச்சு
- கணவனால் கைவிடபட்ட பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி சப்- கலெக்டர் அலுவலகத்தை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டெர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சப்- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து விபத்து மற்றும் கணவனால் கைவிடபட்ட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் காசோலையை கலெக்டர் முருகேஷ் பயனாளிகளிடம் வழங்கினார் பின்னர் நிறுபர்களிடம் அவர் கூறியதாவது:-
மாணவர்கள் தப்பு செய்தாலும் ஆசிரியர்கள அடிக்க கூடாது மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு அடித்திருக்ககூடாது. பெற்றோரிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவனை கண்டிக்க சொல்ல வேண்டும்.
மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது திருத்த வேண்டும். இது மட்டுமின்றி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார். இந்த ஆய்வில் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன். உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தியான முத்திரை அலங்கரித்து வைக்கப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விதை நெல் மூலம் அஷ்ட சக்தி நவராத்திரி கொலு வைக்கப்பட்டது.
நவராத்திரி விழா முன்னிட்டு 9 நாட்களுக்கு முளைக்கட்டிய விதைநெல்கள் வைத்து அஷ்ட சக்தி என்னும் தியான முத்திரை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
இதில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, மன ஒருமைப் பாட்டை அதிகரிக்க, நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள, கோபத்தை குறைக்க, வாழ்வில் முன்னேற்றம் அடைய, பயம் தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வை நீக்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ற நோக்கத்தில் அஷ்ட சக்தி வைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பலர் வருகை புரிந்து பார்த்து செல்கின்றனர்.
இத்தகைய ஏற்பாடுகளை பிரம்ம குமாரிகள் செய்திருந்தனர்.
- படிக்கட்டு, மேற்கூைரயில் பயணம் செய்யும் அவலம்
- கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி மற்றும் அதன் சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வந்தவாசி நகர்புற பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குறைந்த அரசு பஸ்கள் இயக்கப்படுகின்ற காரணத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடி காரணமாக பஸ் படிக்கட்டில் தொங்கி தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்ற அவலம் ஏற்படுகிறது. மேலும் சில பயணகிகள் பஸ்சின் மேற்கூரையில் பயணிக்கின்றனர்.
மாலை பள்ளி கல்லூரி விடுகின்ற நேரத்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தவாசி சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அதிகப்படியான வழித்தடங்களை குறிப்பிட்ட தடங்களில் இயக்கினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமபுற பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களான வந்தவாசியிலிருந்து -பெரணமல்லூர், வந்தவாசியிலிருந்து -நெல்லூர், வந்தவாசியிலிருந்து - குறிப்பேடு, ஆகிய பகுதிகளுக்கு போதுமான பஸ் வசதியில்லாததினால்அந்த கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய வயதானவர்கள் பஸ்களை நாடி சிரமப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
எனவே அரசு சில குறிப்பிட்ட கிராமபுற வழித்தடங்களை ஆய்வு செய்து முறையாக வழித்தடங்களை அதிகப்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- போக்சோ சட்டத்தில் கைது
- சிறையில் அடைத்தனர்
வந்தவாசி:
வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய வாலிபர்.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது பெண் குளிப்பதை வாலிபர் எட்டி பார்த்துள்ளார்.
இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாயார் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
- போலீசார் பேச்சுவார்த்தை
செங்கம்:
செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் குடி தண்ணீர் கேட்டு அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவில்லை எனவும், இதனை கண்டித்து அக்கிராம மக்கள் தீத்தாண்டப்பட்டு - செங்கம் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- கொள்ளையர்களுடன் போராடிய பெண் படுகாயம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டம் வெங்கட் ராமபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசந்திரன் இவர் தன் மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்துடன் திருவண்ணாமலை நேற்று முன்தினம் வந்துள்ளார்.
பின்னர் கோவில் அருகே உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து விட்டு இரவில் கிரிவலம் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் ஈசானிய லிங்கம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பைக்கில் வந்து கிரிவலம் சென்ற சுதா ராணி வைத்திருந்த பேக்கை பறிக்க முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட அவர் பையை இருக்குமாக பிடித்துக் கொண்டார் கொள்ளையர்கள் அந்த பையை விடாமல் இழுத்தனர். இதனால் சுதாராணி கீழேவிழுந்து படுகாயம் அடைந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு பின்னா வந்த கணவர் அங்கு ஓடிவந்தார். அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த சுதா ராணியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- ரூ.3 கோடி இலக்கு
- கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை விநியோக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெகடர் முருகேஷ் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் மைசூர்பா 20 டன், மற்ற இனிப்பு வகைகள் 10 டன் மற்றும் கார வகைகள் 10 டன் ஆக மொத்தம் 40 டன் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ஆவின் மைசூர்பா, கார வகைகள் (முந்திரி மிக்ஸர்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட இலக்கான ரூ.76½ லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு ரூ.3 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் பொது மேலாளர் ராஜாகுமார், துணை பதிவாளர் (பால்பதம்) சந்திரசேகர ராஜா, ஒன்றிய பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- குழந்தை இல்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி மகன் போஸ் (வயது 30), இவரது மனைவி முனியம்மாள் (28), இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லை.
இதனால் ஏக்கத்தில் மன வருத்தத்தில் போஸ் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மதுவில் பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று போஸ் இறந்தார்.
இதுகுறித்து அனக்காவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- நேருக்கு நேர் மோதியதில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 43 ), கண்பார்வை குறைபாடு உடையவர்.
இவரது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் தனியார் நூற்பாலை அருகே வந்த போது, இவர்களது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.
இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளிற்கு ஆயிரக்கணக்கில் பல்வேறு வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார். இதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அந்த டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அந்த கடையில் 1 மணி நேரத்திற்கு மேல் மதுவிற்பனை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மதுபாட்டில்களை வாங்க வந்த மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க முடியாமல் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.
இதுகுறித்து திருவண்ணாமலை டாஸ்மாக் உயர் அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வீட்டில் மயங்கி கிடந்தனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ( வயது 50 ) . இவர் ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி ஜெயலட்சுமி (48) இவர்களது மகள்கள் சரோ ஜினி ( 30 ) , லட்சுமி (28 ) , ஜெயந்தி ( 25) மூத்த மகள் சரோஜினியை ஆரணியை அடுத்ததுந்திரீகம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் ( 32 ) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பின்னர் கணவர் தினகரனுடன் சரோ ஜினி சென்னையில் குடியேறினார். தினகரன் தனியார் நிறுவனத்தில் செல்போன் ' டவர் மெக்கானிக்காக பணி யாற்றினார். 5 ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல் லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டிகிரகப்பிரவேசம் நடத்தினர்.
அதில் பங்கேற்க வந்த சரோஜினி தாய் வீட்டிலேயே இருந்தார். தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து அவரும் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினகரன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். கணவர் இறந்ததை அறிந்த சரோஜினி கதறினார்.
சரோஜினியின் நிலை இவ் வாறாகி விட்டதே என தந்தை அர்ஜூனன், தாயார் ஜெயலட்சுமி, தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்ெகாலை செய்ய முடிவு செய்து சரோஜினியுடன் அனைவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனி டையே கணவரின் இறுதிச் சடங்கிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடிவந்தனர்.
அப்போது சரோஜினி, அவ ரது தாய், தந்தை, தங்கைகள் என 5 பேரும் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் ஆரணி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேக்கரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் நேற்று மாலை சிறுமி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை சேர்ந்த இளைஞர்கள் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர்.
அந்த கேக்கை பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி வெட்டிவிட்டு அதனை சாப்பிட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கேக் வாங்கிய இளைஞர்கள் அதனை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். அப்போது கடையில் இருந்த நபர் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் பேக்கரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் வந்து பிறந்தநாளுக்கு வெட்டப்பட்ட கேக்கை ஆய்வு செய்து அந்தக் கேக் கெட்டுப்போனதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அதிகாரிகள் பேக்கரி மற்றும் அதன் அருகில் உள்ள பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த போராட்டத்தினால் பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






