என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

    • பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செங்கம்:

    செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் குடி தண்ணீர் கேட்டு அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவில்லை எனவும், இதனை கண்டித்து அக்கிராம மக்கள் தீத்தாண்டப்பட்டு - செங்கம் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×