என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போனஸ் தொகை உயர்த்த வலியுறுத்தல்
    • அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சக்தி கோட்ட செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.

    மேலும் இதில் பாலிசிதாரருக்கு போனஸ் தொகை உயர்த்த வேண்டும் பாலிசி கடன் வட்டி விகிதம் குறைக்க வேண்டும் பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி வரி நீக்க வேண்டும் முகவர்களுக்கு பணி கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும் முகவர்களை தொழில் முறையாளராக அங்கீரிக்கப்பட வேண்டும்.

    முகவர் நலநிதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துரைத்தனர்.

    கோரிக்கையை ஏற்காவிட்டால் பெரிய அளவில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கபடும் என்று முகவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன் கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
    • கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்பு

    செங்கம்:

    செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவனன் ஆய்வு செய்தார்.

    புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அவர்ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி தலைவர் செல்வ பாரதி மனோஜ்குமார், செயல் அலுவலர் உஸ்னாபி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (32) மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு புதூர்மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    திடீரென செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேசுவதற்காக சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருட்டில் இருந்து வந்த மர்ம கும்பல் செல்வத்திடம் இருந்த செல்போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இதுகுறித்து செல்வம் நேற்று புதுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூமி பூஜை நடந்தது
    • வந்தவாசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி, வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலார்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தண்டராம்பட்டு அருகே துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பள்ளமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 35). இவர், தானிப்பாடியில் உள்ள ஒரு சிமெண்டு கடையில் கூலி வேலையும், இவரது மனைவி வரலட்சுமி, வெளியூர் சென்று வளையல் வியாபாரமும் செய்து வருகின்றனர்.

    இவர்கள் நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி க்கொண்டு வேலைக்கு சென்றுள்ள னர்.

    மாலையில் வரலட்சுமி வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, 450 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதேபோல் போந்தை கிராமத்தை சேர்ந்தவர் தனக்கோட்டி (55). இவரது மனைவி வள்ளி (52). இவர்கள் இருவரும் வெளியூருக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 350 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.பி. உத்தரவு
    • மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, கண்ணமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான கண்ணமங்கலம் கூட்ரோட்டில் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர்.

    • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கிளையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதியன்று விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். 20 ஆண்டுகள் சிறை இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தர விட்டார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானதால் நடவடிக்கை
    • வேறு யாரையாவது அழைத்து சென்றாரா? விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும். மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலாவதை தடுக்கும் வகையில் மலையின் மீது பக்தர்கள் ஏறி செல்ல வனத்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மகா தீபத்தின் போது குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே மலை மீது சென்றுவர அனுமதி அளிக்கப்படும். இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிலர் முறையாக அனுமதி பெறாமல் மலையின் மீது ஏறி சென்று சிறப்பு பூஜைகள் செய்து உள்ளனர்.

    இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இதில் மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மலர்கள், மலர் மாலை, பழங்கள் மற்றும் நாணயங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளது.

    ஆட்டோ டிரைவருக்கு அபராதம் தகவல் அறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் மலையின் மீது அனுமதியின்றி சென்றது யார்? என்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மலை மீது ஏறியது திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (வயது 30) என்பதும், மேலும் அவர் திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இவர் மட்டும் மலை மீது ஏறி சென்றாரா? அல்லது வேறு யாரையாவது அழைத்து சென்றாரா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மலைக்கு அனுமதியின்றி சென்ற முருகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.
    • மகா தீபம் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதியன்று தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6-ந் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    தீபத்திருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் நடைபெற்றது. விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் அங்கு வைத்து செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து ஊர்வலமாக வந்து ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன

    விழாவிற்கான. ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிவலிங்க ஆலிங்கண பூஜை நடைபெற்றது
    • மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 26-ம்தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் உற்சவ அம்மனை கொலு வைத்து நேற்று முன்தினம் 27-ம்தேதி காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.

    தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசா தங்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த 27-ம்தேதி மாலை ஸ்ரீ மீனாட்சி நாட்டியக் குழு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. நாட்டியக் குழுவினருக்கு கோவில் சார்பில் செயல் அலுவலர் சிவஞானம்,மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்கள், பிரசாதங்கள் வழங்கினர்.

    மேலும் நான்காம் நாளான நேற்று 28-ம்தேதி அம்மனுக்கு சிவலிங்க ஆலிங்கண பூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணா மந்திர் மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்ைக
    • 9 பெண்களிடம் கைவரிசை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏ.சி.எஸ்.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடஜலபதி கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    இதில் அதிக ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை பயன் படுத்தி 9 பெண்களிடம் 30 பவுன் தாலி செயின்களை 2 பெண்கள் பறித்தனர்.

    இதனையொடுத்து நகையை பறிகொடுத்த பெண்கள் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தா மற்றும் மாரி ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையில் கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் போலீசார் 2 பெண்களையும்குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • ரூ.1.94 கோடியில் கட்டப்படுகிறது
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஆற்காடு சாலையில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.1.94 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகர திமுக செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகோபால், ஏ.ஞானவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×