என் மலர்
திருவண்ணாமலை
- உடல்நிலை பாதிப்பால் விபரீதம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். அவரது மகன் கோகுல்குமார் (வயது 30), ராணுவ வீரர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ப. லட்சுமி தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலா தலைமை ஆசிரியர் மனோகர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பாபு சு. லட்சுமி.மு. லட்சுமி புனிதா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 2021 2022 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி தணிக்கை அறிக்கையினை கிராம சபா ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்தல் மழை நீர் கால்வாய் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான நேற்று காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
130 நிறுவனங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமல், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களிலும் என மொத்தம் 72 நிறுவ னங்களில் முரண்பாடு கள் கண்டறியப்பட்டு, அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்து உள்ளார்.
- உலக மூத்தோர் தின விழாவை முன்னிட்டு நடந்தது
- வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை:
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 102 வயதுடைய மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவித்தார்.
உலக மூத்தோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை கடந்த வாக்காளர்கள் நாட்டின் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டு, நமக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.
மேலும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனது நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் விதமாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ்குமார் ஒவ்வொரு மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை அடைந்த வாக்காளர்களை கவுரவித்து நன்றி தெரிவித்திடும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் வசிக்கும் 102 வயதுடைய சுப்பராயன் என்பவரின் மனைவி கல்யாணியின் வீட்டிற்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வாழ்த்து மடலை வழங்கி பொன்னாடை போர்த்தி அவரை கவுரவப்படுத்தினார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 49 ஆயிரத்து 928 மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று வழங்கி வருகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள இனாம்காரியந்தல் பெரிய ஏரி நீர்வரத்து கால்வாய் செல்லும் பகுதிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள செ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65) விவசாயி. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்றார்.
நேற்று காலை வீட்டுக்கு வந்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேவராஜ் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விண்ணப்பிக்க 8-ந்தேதி கடைசி நாள்
- போட்டி வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்
திருவண்ணாமலை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கடிதத்தின்படி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையம் செயல்படுகிறது.
பள்ளிகளில் 9-ம் மற்றும் 11-ம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு, தேசிய சீனியர் பிரிவில் பதக்கம் வென்று கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் தகுதியின் படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எனவே வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேற்படி விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து, சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 8-ந்தேதி ஆகும். மேலும் 2022-2023 - ஆம் ஆண்டில் வேலூர் சத்துவாச்சாரி தூக்கும் முதன்மை நிலை மையத்திற்கு மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநில அளவிலான தேர்வுகள் மேற்படி மையத்தில் வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறில் புதியதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் நேற்று தொடங்கப்பட்டது.
செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, தெள்ளார், பெரணமல்லூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட ஒன்பது யூனியன் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி 64 உள்பட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 850 பள்ளிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை ஒ. ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆர்டிஓ ஆர். மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர்கள் என். பாபு, டி.ராஜு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஞானவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், வழக்கறிஞர் பாட்ஷா, நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- கர்ப்பிணிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் மரு. பூங்குழலி வரவேற்று பேசினார். புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீரகம், வயிறு, காது, மூக்கு, தொண்டை, இதயம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு சிகிச்சைகளும், மருத்துவ ஆலோசனைகளும், இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமலை, சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- ஆரணி நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
- 39 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் என்ஜினீயர் விஜயராஜ காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். மேலும் இதில் திமுக காங்கிரஸ் மதிமுக விடுதலைசிறுத்தை அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில் 20வது வார்டு பெண் கவுன்சிலர் ரேவதி பேசியதாவது :-
ஆரணி டவுன் மைய பகுதியில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பள்ளிகளில் காலை உணவு திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இரவின் நிழல் திரைப்படத்தினை ஆரணியில் உள்ள திரைய ரங்கங்களில் திரையிடபடும் போது கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
- வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமம், ஆரணி சாலையில் சிறு பாலத்தில் சேதம் அடைந்து, தார் சாலையின் பக்கத்தில் குழிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடைந்தனர். இந்நிலையில் வடதண்டலம் இளைஞர்கள் விபத்து ஏற்படாமல் இருக்க சாக்கு பையில் மணலைக் கொட்டி அடுக்கி வைத்துள்ளனர்.
அந்த வழியில் செல்லும் நெடுஞ்சாலை துறையில் பணி புரியும் அலுவலர்கள் கடந்த 3 மாதமாக அதை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் வந்தால் சிறுபாலம் உடைந்து விடக் கூடிய அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று வயாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 2022-2023 ஆண்டுக்கான வரவு செலவு குறித்து பேச்சு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28-வது பொது பேரவை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிகால் குமரன் மஹாலில் நடைபெற்றது.
வங்கியின் இணைப்ப திவாளர் மேலாண் இயக்குனர் ஜெயம் வரவேற்றார். வங்கியின் நிர்வாக குழு தலைவர் பெருமாள் நகர் ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கியின் நிர்வாக குழு இயக்குனர்கள் பேரவை உறுப்பினர்கள், இணைப்பு சங்கங்களின் செயலா ளர்கள் பங்கேற்றனர்.
பொது மேலாளர் (பொறுப்பு). விஜயகுமார் வங்கியின் 2021-2022 நிதி நிலை ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைப்படி வரவு, செலவு, லாப நட்ட கணக்கு ஆஸ்தி பொறுப்பு பட்டியல். வாசித்தார்.
மேலும் 2022-2023 ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு மற்றும் ஈட்டக்கூடிய லாபம் குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு சரக துணை பதிவாளர்கள் ராஜசேகரன், கமல கண்ணன், துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம், ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாக குழு தலைவர் அவர்களால் பேரவை வாழ்த்தப்பட்டது நிறைவாக இளங்கோவன் உதவி பொதுமேலாளர் (கடன்) நன்றி தெரிவித்தார்.
- சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
- அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆற்காடு பாலாற்றிலிருந்து ஆரணி பைப் லைன் வழியாக குடிநீர் வருவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
தற்போது அந்த திட்டம் நிறைவேற்றபட்டு தினமும் ஆரணி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவழிவகை செய்யபட்டுள்ளன.
ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஆரணி நகருக்கு குடிநீர் வேண்டாம் என ஆரணி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக வேலூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் ஆரணி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வியிடம் முறையிட்டார்.
காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் வேண்டாம் என்று அதிகாரிகளில் அலட்சியமாக சொல்லி இருக்கின்றனர் அதிகாரிகள் அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
40 லட்சம் லிட்டர் குடிநீர் நாளை முதலே விநியோகம் செய்யபடும் இதனை அதிகாரிகள் தடுப்பதாகவும் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார்.
குடிநீர் தேவை என்று ஆணையர் கடிதம் அளிக்க வேண்டும் கொடுத்த கடிதத்தை நானே நேரில் சென்று வேலூர் நீரேற்று நிலைய அதிகாரியிடம் அளிக்கின்றேன் என்றும் தெரிவித்தார். கமிஷனர் கடிதம் அளிப்பதாக கூறினார்.
மேலும் சூரியகுளத்திற்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஓதுக்கபட்டு தற்போது கிடப்பில் உள்ளன என அடுக்கடுக்கான புகாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் எடுத்து வைத்தார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் அ.தி.மு.க. நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு கவுன்சிலர்கள் நகர மாணவரணி செயலாளர் குமரன் நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






