என் மலர்
நீங்கள் தேடியது "நிறுவனங்கள் மீது நடவடிக்கை"
- திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- புகார் பெறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் :
தொழிலாளர் துறையில் நுகர்வோர் நலன் பாதுகாப்பு கருதி திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உணவு நிறுவன உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டமுறை எடையளவு சட்டத்–தின் கீழ் ரேஷன் கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவு குறைவு தொடர்பாக கூறப்பட்ட புகார்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொட்டலங்களில் அறிவிக்க வேண்டிய தயாரிப்பாளர் முழு முகவரி, பொருளின் பெயர், தயாரிப்பு மாதம், வருடம், எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிக்கப்படாத பொட்டலப்பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது.
தெருவோரம், நடைபாதைகளில் உள்ள கடைகள், சந்தைகள் ஆகிய இடங்களில் முத்திரையிடப்படாத எடையளவுகள் பறிமுதல் செய்வது குறித்தும் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அரிசி ஆலைகளில் பொட்டலமிடப்படும் பொட்டலங்களில் அளவு குறைவாக இருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அவ்வாறு அளவு குறைவாக பொட்டலமிடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் அமைப்புகளிடம் இருந்து புகார் பெறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான நேற்று காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
130 நிறுவனங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமல், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களிலும் என மொத்தம் 72 நிறுவ னங்களில் முரண்பாடு கள் கண்டறியப்பட்டு, அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்து உள்ளார்.






