என் மலர்
நீங்கள் தேடியது "MLA Argument"
- சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
- அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆற்காடு பாலாற்றிலிருந்து ஆரணி பைப் லைன் வழியாக குடிநீர் வருவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
தற்போது அந்த திட்டம் நிறைவேற்றபட்டு தினமும் ஆரணி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவழிவகை செய்யபட்டுள்ளன.
ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஆரணி நகருக்கு குடிநீர் வேண்டாம் என ஆரணி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக வேலூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் ஆரணி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வியிடம் முறையிட்டார்.
காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் வேண்டாம் என்று அதிகாரிகளில் அலட்சியமாக சொல்லி இருக்கின்றனர் அதிகாரிகள் அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
40 லட்சம் லிட்டர் குடிநீர் நாளை முதலே விநியோகம் செய்யபடும் இதனை அதிகாரிகள் தடுப்பதாகவும் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார்.
குடிநீர் தேவை என்று ஆணையர் கடிதம் அளிக்க வேண்டும் கொடுத்த கடிதத்தை நானே நேரில் சென்று வேலூர் நீரேற்று நிலைய அதிகாரியிடம் அளிக்கின்றேன் என்றும் தெரிவித்தார். கமிஷனர் கடிதம் அளிப்பதாக கூறினார்.
மேலும் சூரியகுளத்திற்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஓதுக்கபட்டு தற்போது கிடப்பில் உள்ளன என அடுக்கடுக்கான புகாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் எடுத்து வைத்தார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் அ.தி.மு.க. நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு கவுன்சிலர்கள் நகர மாணவரணி செயலாளர் குமரன் நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






