என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அழுகிய நிலையில் உடல் மீட்பு
    • போலீசார் விசாரணை

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி மாணிக்க நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் சுரேஷ் (வயது 33), பிரகாஷ் (31). சுரேசுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பிரகாஷ் கன்டெய்னர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    பிரகாஷ் தனது அண்ணன் சுரேஷ் வீட்டுக்கு பின்னால் ஒரு தகர செட் அமைத்து அதில் வசித்து வந்தார். தனக்கு திருமணமா காததாலும், தந்தை மனநிலை பாதிக்கப்பட்டதாலும், தாய் இறந்துவிட்ட நிலையிலும் பிரகாஷ் விரக்தியில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் பிரகாஷ் தான் வசித்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை யாரும் பார்க்காத நிலையில் 3 நாட்களுக்கு மேலானதால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தானிப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன தணிக்கையில் 2 பேர் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் தீவிர விசாரணை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விஜயதசமி உற்சவம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆயுத பூஜை விழாவில் செயல் அலுவலர் சிவஞானம், முன்னாள் அற காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நவராத்திரி விழா முன்னிட்டு நடந்த நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாட்டியப்பள்ளி மாணவிகளுக்கு செயல் அலுவலர் சிவஞானம் சான்றிதழ்கள் வழங்கினார்.

    மேலும் விஜய் தசமி 10-ம் நாளான நேற்று அம்மனுக்கு பாரிவேட்டை உற்சவம் நடந்தது.

    இதில் கோவில் மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன், ஓதுவார் சிவக்குமார், எழுத்தர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் அய்யம்பாளையம் கிராமத்தில் நேற்று ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா முன்னிட்டு 10-ம்நாள் விஜயதசமி உற்சவம் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் திருவீதி உலாவும், தொடர்ந்து பாரிவேட்டையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • நகை, எல்.இ.டி டி.வி.யை எடுத்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55), இவரது மனைவி அம்சா இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று தண்டபாணி குடும்பத்துடன் வீட்டின் கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். நேற்று காலை கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    வீட்டிலிருந்த பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதே போல அதே தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை, எல்.இ.டி டிவி ஆகியவற்றை திருடி சென்று ள்ளனர்.

    மேலும் கருணாகரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் அவரது வீட்டில் இருந்து ரூ.6 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை திருடி சென்று ள்ளனர்.

    3 வீடுகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து கொள்ளை யர்கள் தங்கள் கைவரி சையை காட்டியு ள்ளனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியே தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    மேலும் தனிப்படை அமைத்து போலீசர் கொள்ள கும்பலை தேடி வருகின்றனர்.

    • மனைவியிடம் போலீசார் விசாரணை
    • 3 கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 45) முன்னாள் ராணுவ வீரர் இவருடைய மனைவி ரேவதி. மகள் பிரியதர்ஷினி (17) விக்னேஸ்வரன் (15) நீதர்(10) என்ற மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் ஆரணி டவுன் வி. ஏ. கே. நகர் அருகே உள்ள அம்மன் நகரில் வசித்து வந்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல், ரேவதி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரேவதி அவரது மகள் மகன்களை அழைத்துக் கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் மோட்டூர் அருகே பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அம்மன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவரை பார்க்க ரேவதி வந்தார்.

    இரவு அவர் அங்கேயே தங்கினார். இன்று அதிகாலையில் வெற்றிவேலுக்கு உடல் நிலை சரியில்லை அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது அண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று வெற்றிவேலை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வெற்றிவேலின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வெற்றிவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அவரது மனைவி ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது இரவு முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்ததாகவும் அவர்கள் தாக்கியதில் வெற்றிவேல் காயம் அடைந்தார் எனவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரேவதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரசீது இல்லை செல்போனை தர வேண்டுமென சியாமு கேட்டுள்ளார். ராஜகோபால், மறுத்துள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த சியாமு, ராஜகோபாலை, கடுமையாக தாக்கினார்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கடை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால், (வயது 70). இவர் சேத்துப்பட்டு போளூர் சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் சேத்துப்பட்டு பழம் பேட்டை வெங்கடாஜலபதி, தெருவை சேர்ந்த சியாமு (எ) மூர்த்தி, (வயது 19). செல்போனை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். கடந்த 18-ந் தேதி அடகு வைத்த செல்போனை சியாமு மீட்க சென்றார்.

    அப்போது அடகு வைத்ததற்கான ரசீது இல்லை என்று தெரிய வருகிறது. ராஜகோபால், ரசீது கண்டிப்பாக தேவை என கேட்டுள்ளார்.

    ரசீது இல்லை செல்போனை தர வேண்டுமென சியாமு கேட்டுள்ளார். ராஜகோபால், மறுத்துள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சியாமு, ராஜகோபாலை, கடுமையாக தாக்கினார்.

    இதில் காயமடைந்த ராஜகோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சியாமு கைது செய்தனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது.
    • வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 1.31 கிலோ வெள்ளி கிடைத்தது
    • ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை யாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

    இவ்வாறு பவுர்ணமிக்கு பிறகு, பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • 40 பவுன் நகைகளை அள்ளி சென்றனர்
    • பூட்டை உடைத்து துணிகரம்

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு அடுத்த பெருங்குளத்துாரைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவர் மனைவி அம்சா. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டை உ ட்புற மாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் மாடியில் உள்ள அறையில் தண்ட பாணி படுத்து துாங்கினார். பின்னர், நேற்று காலை கீழே இறங்கி வந்தபோது, வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பதறியபடியே பீரோ வைத் துள்ள அறையில் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    மேலும், அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த டிவி ஆகி யவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

    அதேபோல், அருகில் வசிக்கும் சக்கரபாணி என் பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு பீரோ வில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மேலும், அதே பகுதி யில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு, பீரோ வில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் ரூபாய் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, பாதிக்தனியே போலீஸ் ஸ்டேஷனில்கப்பட்ட 3 பேரும் தனித் தானிப்பாடி புகார் கொடுத்தனர். அதன் பேரில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட் சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீ சார் அங்குவந்து, திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத் தடுத்து 3 வீடுகளில் நகை, டிவிகள் மற்றும் பணம் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

    மக்கள் கோரிக்கை த ண்டராம்பட்டு, தானிப்பாடி ஆகிய பகுதி களில் இதுபோன்று வீடு - புகுந்து கைவரிசை காட்டும் சம்பவம் அடிக்கடி நடப்பதால், போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும். மேலும், தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல் லைக்கு உட்பட்ட பெருங் குளத்தூர் பகுதியில் காப் புக்காடு இருப்பதால் நகை திருடும் மர்ம நபர்கள் அந்த காட்டுக்குள் சென்று பதுங் கிக்கொள்வதாக கூறப்படு கிறது. எனவே, இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத் தில், எஸ்பி தனிக்கவனம் செலுத்தி தண்டராம்பட்டு, தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற திருடு சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த தண்டப்பந் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 65), இளநீர் வியாபாரி. இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்து விட்டார்.

    கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரைமீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தகர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி நாளில் ரூ.8 லட்சம் நோட்டுகள் கொண்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    மாலையில் கும்பகோணம் முருகன் பொம்மலாட்டக்கு ழுவினரின் பக்த பிரகலாதா பொம்மலாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விழாவையொட்டி ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் புதுப்பேட்டை ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா முன்னிட்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மற்றொருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தமிழ்மின் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர், மோட்டார் சைக்கி ளில் மற்றொருவருடன் திரு வண்ணாமலை-அவலூர் பேட்டை சாலையில் பாலா னந்தல் கூட்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×