என் மலர்
திருவண்ணாமலை
- சாலை அமைக்க இடையூறு செய்வதாக புகார்
- நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரம் எதிரே சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் ஒட்டி செல்லும் 5-வது தெருவில் சாலை அமைக்க தனிநபர் ஒருவர் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதாக கூறி அந்த தெருவில் வசிக்கும் சில குடும்பத்தினர் நேற்று பே கோபுரம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.
இதை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற 15- ந் தேதி வரையிலும் மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே
விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்கவேண்டும்.
இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தம்பதியிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் விபரீதம்
- டீக்கடைக்காரர் கைது
போளூர்:
போளூர் அடுத்த மங்களா மேடு கூட்ரோட்டில் செங்குனம் கிராமத்தை சேர்ந்தவர் முபினுதீன் (வயது 30). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் நோக்கி பைக்கில் தம்பதி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முபினுதீன் டீக்கடையில் பைக்கை நிறுத்தி டீ குடித்தனர்.
அப்போது முபினுதீனுக்கும் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முபினுதீன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த தர்மலிங்கம் (75) நாடக ஆசிரியர் தகராறு செய்தவரை விளக்கி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முபினுதீன் தர்மலிங்கத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தர்மலிங்கத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என சோதனை
- அதிகாரிகள் உடன் சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்வது வழக்கமாகும். ஆரணி
டவுன் பகுதியில் இயங்கி வரும் 11 பட்டாசு கடைகளை ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இதில் முறையான ஆவணங்கள் உரிமம் புதுப்பிக்கபட்டுள்ளதா எனவும் விபத்து குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதா பக்கெட்டில் தண்ணீர் தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் வருவாய் ஆய்வாளர் வேலுமணி கிராம நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
முன்னாள் முதலமைச்சர், இடைக்கால பொதுச்செயலாளர், பிரதான எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மக்கள் பணியாற்றிட வேண்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சா ர்பில், திருவண்ணாமலை, மணலூர்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தர்காவில், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், மாவட்ட செயலாளர், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி. எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க. அவைத்தலைவர், தமிழ்மகன்உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தர்காவில் சிறப்பு தொழுகை செய்தனர்.பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது சிறப்பானது.
- புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
போளூர்:
போளூர் அடுத்த முருகா பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், ஸ்ரீ முருகாத்தம்மன் திருக்கோவில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் செய்து பிள்ளையார் கோவில் அருகில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சரஸ்வதி பூஜையன்று கிராம தேவதை ஸ்ரீ அருள்மிகு முருகாத்தம்மன் சாமியை அலங்கரித்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போளூர் வழக்கறிஞர் தினகரன் ஸ்ரீ முருகாத்தம்மன் கோவில் கமிட்டி தலைவர் மு.சா. வீரபத்திரன் என்கிற தேசபக்தன் முன்னாள் மணியம் வி.எஸ். ராஜாமணி ராவ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பரமசிவம், ஊர் நாட்டாமை காரர்கள் ஆரிமுத்து, பெரியதம்பி, சங்கர், பன்னீர்செல்வம் முனிரத்தினம், கிருஷ்ணன், நடராஜன் மற்றும் சேகர், மதுரைவீரன்,பாபு, வைடூரியம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்த வேண்டும்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்தக்கோரி போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் பலர் கல்லூரியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கலந்தாய்வு முறையாக நடத்தக்கோரி இடம் கிடைக்காத மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கல்லூரி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கல்லூரி முன்பு அவர்கள் அமர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும். வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-
மொத்தம் 2,688 இடங்களுக்கு படிப்படியாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் விண்ணப்பித்த 520 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் சேர்க்கை முடிவுற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த கலந்தாவை மீண்டும் முறையாக நடத்த வேண்டும். முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அந்த கலந்தாய்வினையும் முறையாக நடத்த வேண்டும் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத் ஆகியோரிடம் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் காவேரியம்மாள், சென்னை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் ரமணன் ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் நிரப்பப்படாமல் உள்ள 136 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முறைகேடு நடைபெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அவர்களிடம் அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
- செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் கிராம அளவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொது சுகாதார துறையின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, விஜயலட்சுமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, சிறுநீரில் உப்பு உள்ளிட்ட பரிசோதனைகள், காது, மூக்கு, தொண்டை உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் பரிசோதனை யின் முடிவில் ஆலோசனை களும், சிகிச்சைகளும் இலவசம் மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தபால் நிலைத்தில் பணிபுரிந்து வந்தார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி வீராசாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவர் வந்தவாசி தபால் நிலையத்தில் இரவு நேர காவலா ளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவரது நண்பரான செல்வராஜ் என்பவருடன் நேற்று இரவு துரைராஜ் பைக்கில் ஆராசூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் துரைராஜுவும், செல்வ ராஜும் படுகாயமடைந்தனர்.
அந்த வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் துரைராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் படுகாயம் அடைந்த செல்வராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது
- கோவில் நிர்வாகம் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியாக வாழ்ந்து வந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் நக்கீரன் (வயது 55) டாக்டர்.
இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும் மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சேவூர் கிராமத்தில் உள்ள தனது கிளிக்கில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த கொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனு மதித்தனர். பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






