என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்."

    • 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது
    • கோவில் நிர்வாகம் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×