நாடக ஆசிரியர் அடித்து கொலை

தம்பதியிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் விபரீதம் டீக்கடைக்காரர் கைது
நாடக ஆசிரியர் அடித்து கொலை
Published on

போளூர்:

போளூர் அடுத்த மங்களா மேடு கூட்ரோட்டில் செங்குனம் கிராமத்தை சேர்ந்தவர் முபினுதீன் (வயது 30). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் நோக்கி பைக்கில் தம்பதி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முபினுதீன் டீக்கடையில் பைக்கை நிறுத்தி டீ குடித்தனர்.

அப்போது முபினுதீனுக்கும் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முபினுதீன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த தர்மலிங்கம் (75) நாடக ஆசிரியர் தகராறு செய்தவரை விளக்கி உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முபினுதீன் தர்மலிங்கத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தர்மலிங்கத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com