8 லட்சம் ரூபாய் நோட்டில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நடந்ததுபக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது
 ரூ.8 லட்சம் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்.
 ரூ.8 லட்சம் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்.
Published on

கண்ணமங்கலம்:

கணணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி நாளில் ரூ.8 லட்சம் நோட்டுகள் கொண்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மாலையில் கும்பகோணம் முருகன் பொம்மலாட்டக்கு ழுவினரின் பக்த பிரகலாதா பொம்மலாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விழாவையொட்டி ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் கண்ணமங்கலம் புதுப்பேட்டை ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா முன்னிட்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com