என் மலர்
உள்ளூர் செய்திகள்

எல்.ஐ.சி. நிர்வாகத்தை கண்டித்து முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- போனஸ் தொகை உயர்த்த வலியுறுத்தல்
- அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சக்தி கோட்ட செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
மேலும் இதில் பாலிசிதாரருக்கு போனஸ் தொகை உயர்த்த வேண்டும் பாலிசி கடன் வட்டி விகிதம் குறைக்க வேண்டும் பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி வரி நீக்க வேண்டும் முகவர்களுக்கு பணி கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும் முகவர்களை தொழில் முறையாளராக அங்கீரிக்கப்பட வேண்டும்.
முகவர் நலநிதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துரைத்தனர்.
கோரிக்கையை ஏற்காவிட்டால் பெரிய அளவில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கபடும் என்று முகவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன் கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






