என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றம்
    X

    போக்குவரத்து இடையூறாக இருந்த சாலையில்உள்ள மரம்.

    போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றம்

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டது
    • நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அகற்றாத கடைகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெரும்பாலான கடைகள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முதல் அகற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் செங்கம் நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் உள்ள பழமை வாய்ந்த குளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.

    இதனால் காலை முதல் பிற்பகல் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

    மேலும் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மில்லத் நகர் வரையிலும் உள்ள சாலை வர கடைகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×