என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் அடியோடு இடிந்து கிடக்கும் காட்சி.
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுசுவரை மீண்டும் கட்ட வேண்டும்
- கன மழையால் சேதம்
- மாணவர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளது. இப்பள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சுற்றி சுமார் 200 அடி நீளத்துக்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தன.
மேலும் இதனை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு தேவையான கழிப்பறைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக இப்பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுமார் 150 அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவர் அடியோடு சாய்ந்து விட்டன.
அதோடு கழிப்பறை விழுந்து விட்டது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமலும் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுசூழல் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கீழே சாய்ந்து விட்டன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளனர்.






