search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery plan"

    • மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.

    மதுரை

    மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

    பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.

    • முட்புதரில் 5 பேர் பதுங்கியிருந்தனர்
    • 2 கத்தி பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் பதுங்கியிருந்ததை கண்டு அவர்களை பிடிக்க சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 5 பேரும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். உடனே போலீசார் விரட்டிச்சென்ற தில் 3 பேர் பிடிபட்டனர்.

    அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 29), பாண்டியராஜன் (33), கமல்ராஜ் (33) என்பதும் கூட்டு க்கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×