என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 teachers suspended"

    • 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
    • கல்வி அலுவலர் உத்தரவு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 765க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளி தலைமையாசிரியராக மீனாட்சி உள்ளிட்ட 20 ஆசிரியர்கள் உள்ளனர்.

    மேலும் ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் பூபதி 11-ம் வகுப்பு அறிவியில் பிரிவில் பயின்று வருகின்றார்

    பள்ளி மாணவனை 4 ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

    4 ஆசிரியர்கள் தாக்கியதை 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் பூபதி தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

    இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியை மீனாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவனை தாக்கியதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஆரணி தாலுகா போலீசில் மாணவன் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் மாவட்டகல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் சேவூர் அரசு பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவனை உடல் ரீதியாக தாக்குதல் மற்றும் மனஉலைச்சல் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆங்கிலம் ஆசிரியர் திலிப்குமார் ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தனர் மற்றும் நித்தியானந்தம், பாண்டியன் ஆகிய 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆரணி அருகே பள்ளி மாணவனை அடித்த புகாரில் 2 ஆசிரியர்கள் பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×