என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of drugs"

    • படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு தப்பி ஓட்டம்.
    • பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள்.

    அகமதாபாத்:

    குஜராத் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.

    நேற்று அவர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு படகை நிறுத்த உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த படகு நிற்காமல் தப்பிச் சென்றது. அந்த படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு விட்டு படகை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த கடல் பகுதியில் குதித்து ஆய்வு செய்தனர். அப்போது பல மூட்டைகள் கிடைத்தன. அவற்றை கப்பலுக்கு கொண்டு வந்து பார்த்த போது மூட்டைக்குள் போதைப் பொருள் பொட் டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

    300 கிலோ அளவுக்கு அந்தப் போதைப் பொருட்கள் இருந்தன. அதில் பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    பாகிஸ்தான் போதைப் பொருள் வியாபாரிகள் இவற்றை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விற்ப தற்காக படகில் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • சோதனையின் போது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 ஊசிகள் இருந்தது.
    • கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிலர் போதை ஊசி மூலம் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு அறையில் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 சிரஞ்சுகள் (ஊசிகள்) இருந்தது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 43), மதுரை சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த அசோக்(32), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜவேலு(29), திருப்பூர் வீரபாண்டி பிாிவு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பதும் இவர்கள் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 21 சிரஞ்சுகள் மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தனர்.

    விலை உயர்ந்த இந்த போதை பொருள் இவர்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது, போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்
    • நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை பிரிக்கப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள் நன்னடத்தை பிணை சான்று மற்றும் வழக்குகளின் தலைமறைவு எதிரிகள் இன்று மாவட்ட அளவில் சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது. நன்னடத்தை பிணை சான்று பெற 40 பேருக்கு அழைப்பு விடுத்து இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 வழக்குகள் பதியப்பட்டு 10 பேர் கைது. சாராய வழக்குகளில் 206 லிட்டர் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

    • வாலிபர் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    ஆரணி:

    ஆரணி அருகே களம்பூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டன.

    இதன் எதிரொலியால் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் களம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது களம்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×