என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. வெற்றி"
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
- போளூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் போளூர் பஸ் நிலையம் அருகில் நடந்தது.
கூட்டத்திற்கு போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா, மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த கூட்டத்தை பார்த்தால் தி.மு.க.விற்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது தேர்தல் நடத்தினால் கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். அதுவும் நமது தலைமையில் கூட்டணி அமையும்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதை கொடுத்தாலும் வெற்றி பெற செய்து விடுவார். எந்தப் பணியாக இருந்தாலும் சீரும் சிறப்பாக செய்து முடித்து விடுவார்.
சட்டமன்றத்தில் எடப்பாடி பேசுகின்ற போது உடனடியாக குறிப்பு களை எடுத்துக்கொண்டு அவரது கையில் கொடுக்கின்ற ஆற்றல் மிக்கவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.
நான் சட்டமன்றத்தில் 1980-ம் ஆண்டு இருக்கும்போது தான் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சியினர் திட்டத்திற்கு எங்கே நிதி இருக்கிறது என்று கேட்டனர்.
எம்.ஜி.ஆர். நான் தமிழ்நாடு முழுவதும் துண்டு ஏந்தியாவது இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று கூறினார்.
இன்று தமிழகத்தில் 48 லட்சம் குழந்தைகள் பசியாற உணவு அருந்தும் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். ஆனால் இன்று எவ்வளவு பேருக்கு காலை உணவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மட்டும் தான்.
பொங்கல், தீபாவளிக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதன் மூலம் நெசவாளர்கள் துயரங்களை துடைத்தார்.
தமிழ்நாட்டில் பொன்னெழுத்துக்களால் பதிக்கக்கூடிய அளவிற்கு வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது ஆட்சி நூறு நாட்கள் கூட நிலைக்காது என்று கூறினார்கள்.
ஆனால் பத்தாயிரம் மயிலுக்கு தொலைவில் உள்ள அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது வெற்றி பெற்றவர் எம்ஜிஆர் இதற்குக் காரணம் அவரது ஆற்றலும் சிந்தனையும் தான்.
எம்ஜிஆர் உயிர் உள்ளவரை 13 ஆண்டுகள் தொடர்ந்து திமுக தலை தூக்க முடியவில்லை என்பது வரலாறு.
அதிமுகவை அசைத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர் இந்த இயக்கத்தை பொறுத்தவரை சில வெட்டுக்கிளிகள், சில வேடந்தாங்கல் பறவைகள், சில பட்டு பூச்சிகள் சில பருவ கால சிட்டுகள் பிரிந்து சென்றாலும் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து விட முடியாது.
எந்த மாநிலத்திலும் இல்லாத வரட்சி நிவாரண திட்டத்தை ெஜயலலிதா கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை திட்டத்தையும் கொண்டு வந்தார் ஏழை குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தையும் தந்தார்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வந்தனர் தற்போது இந்த திட்டத்தை திமுகவினர் முடக்கி வைத்துள்ளனர்.
99 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ள தலைமையாக எடப்பாடி பழனிசாமி பவனி வந்துள்ளார். அடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி தான். இந்த இயக்கம் பேரறிஞர் அண்ணாவால் வந்தது எம்ஜிஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி தலைமையில் இந்த இயக்கம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த தவ மண்ணில் எவராலும் சாய்த்து விட முடியாது என நாம் நிரூபித்து காட்டுவோம். நாற்பதும் நமதே உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில் குமார், மாவட்ட பொருளாளர் நயினார் கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.






