என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வேளாண்மை கட்டிடம் கட்ட பூமி பூஜை
    X

    வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    புதிய வேளாண்மை கட்டிடம் கட்ட பூமி பூஜை

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.2.41 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பில் புதியதாக வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அரி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டபூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×