என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐங்குணம், வேடநத்தம், மேக்களுர் ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூரில் நடந்த விழாவில் பேரூராட்சி சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ச.க.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே.அன்பு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா ஏழுமலை, பேரூராட்சி துணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுமதி அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த 751-மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சோமாசிபாடி அட்மா.சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்யராஜ், கனகா பார்த்திபன், ஜீவா, அம்பிகா ராமதாஸ், கே.பி.மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் குப்புசாமி, மேக்களூர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாண்டுரங்கன், கட்டிட குழு தலைவர் ராஜவேலு, பள்ளி மேலாண்மை குழுதலைவர் அறிவழகி ஞான முருகன், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், சமூக ஆர்வலர் கே.வி.ஏழுமலை, ஆசிரியர் - ஆசிரியைகள், திமுக அணி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.






