என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various roads are potholedvvv"

    • பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆவேசம்
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது

    ஆரணி:

    ஆரணி அண்ணாசிலை அருகில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது.

    இதில் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தூசி மோகன் பங்கேற்றார்.

    கூட்டதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆரணி நகராட்சியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஆரணி நகர் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆரணி நகர பகுதி மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து ஆரணி நகர் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டது தற்போது அந்த திட்டமும் கிடப்பில் உள்ளன.

    இதனால் ஆரணி நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டதில் ஒன்றிய செயலாளர்கள் திருமால், கஜேந்திரன் வக்கீல் சங்கர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன் மாவட்ட ஐ.டி.விங் சரவணன், நகர மாணவரணி செயலாளர் குமரன், பையூர் சதிஷ், மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கே ற்றனர். இறுதியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

    ×