கருணை கொலை செய்ய மூதாட்டி மனு

சொத்தை மீட்டு தர வலியுறுத்தல் புற்று நோயால் அவதி- கண்பார்வை இழந்ததால் விரக்தி
கருணை கொலை செய்ய மூதாட்டி மனு
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்த தர்மன். இவரது மனைவி சின்னகுழந்தை (வயது95) தம்பதிகளுக்கு நடராஜன் ராஜேந்திரன் குமரேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இதில் தர்மன் ஏற்கனவே இறந்துவிட்டார். குமரேசன் நடராஜன் ஆகியோரும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் சின்னகுழந்தை வசித்து வருகின்றார்.

தற்போது ராஜேந்திரனுக்கு போதிய வருமானம் இல்லாததால் சின்னகுழந்தைக்கு, வரும் முதியோர் உதவி தொகை வைத்து பிழைப்பை நடத்தி வருகின்னர்.

மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும் கண்பார்வை இழந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் சின்னகுழந்தை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com