என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசிய காட்சி.
ஆரணியில் பீட்ரூட் பொறியலில் எலி தலை கிடந்த ஒட்டலுக்கு சீல்
- உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
- தரமான முறையில் உணவை வழங்க அறிவுரை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள சைவ ஓட்டலில் பீட்ரூட் பொறியலில் எலி தலை கிடந்தது.இதனை கண்டித்து ஓட்டலை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் திடிரென எலி சுற்றி திரிந்த காரணத்தினால் ஓட்டலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஓட்டல் லைசென்சு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் ஓட்டல் நலசங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசியாதாவது:- ஆரணியில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்படுகின்றன.
பிரியாணி சாப்பிட்டு இறந்த சிறுமி கரப்பான் பூச்சி காடையில் புழு தற்போது பொறியலில் எலி என்பதால் ஆரணியில் உள்ள உணவகங்களில் சாப்பிட அச்சமாக உள்ளது.
இதனால் தரமான முறையில் உணவை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓட்டல் சங்க உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.






