என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials are shocked by the investigation"

    • பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததையடுத்து சோதனை
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே சைவ உணவகம் இயங்கி வருகிறது.

    இந்த சைவ உணவகத்தில் நேற்று முன்தினம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி என்பவர் 35 பார்சல் சாப்பாடு வாங்கி சென்றார்.

    இந்த உணவில் கொடுத்த பீட்ரூட் பொரியலில் எலி தலை உள்ளதாக கூறி சுமார் 25-க்கும் மேற்பட்டோர் சைவ உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சம்மந்தபட்ட உணவகத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது தேனீர் டீ ஸ்டாலில் எலி அங்கும் இங்குமாக வந்து ஓடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தில் ஆய்வின் போது எலி வரவாய்ப்புள்ளன. ஆனால் எலி அதே இடத்தில் தங்கும் அளவில் இல்லை.

    உணவகதத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலிகள் வராதபடி ஓட்டைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரணி பகுதிக்கு தனி உணவு பாதுகாப்பு அதிகாரிள் நியமிக்கபட்டுள்ளனர்.இதுவரையில் ஆரணி அசைவ ஓட்டல்களில் எடுத்த பரிசோதனை மூலம் வழக்கு தொடப்பட்டுள்ளன என்றார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோ சேகர் உடனிருந்தனர்.

    ×