என் மலர்
நீங்கள் தேடியது "Threat to first wife"
- எனக்கு துரோகம் செய்தது நியாயமா என கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் செய்யாறு மாங்கல் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கன்னியம்மாள் (28), இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கீதா, ஹரிஷ் குமார் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மணிகண்டன் சின்ன எழுச்சேரியை சேர்ந்த சினேகா (19), என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த சினேகாவின் தாய்வீடு பட்டறை கிராமத்தில் மணிகண்டனின் எதிர் வீட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் 2-வது மனைவியை அழைத்துக் கொண்டு பட்டறை கிராமத்திற்கு வந்துள்ளார்.
அதனைக் கண்ட கன்னியம்மாள் எனக்கு துரோகம் செய்துவிட்டு திருமணம் செய்தது நியாயமா என கேட்டதற்கு நான் அவளை 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்றும் இனி அவளுடன் தான் வாழ்வேன் என்றும், கூறி அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக கன்னியம்மாள் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.