என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A murderous rampage"

    • வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மோதல்
    • தனியார் பஸ் புரோக்கர், டிரைவர் மீது புகார்

    வேலூர்:

    திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் விமலன்( வயது 35). இவர் கடந்த 16-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்ஸில் பணியில் இருந்தார்.

    மதியம் பஸ் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது அவர்களுக்கு முன்னால் புறப்பட்டு செல்ல வேண்டிய தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    மேலும் அரசு பஸ்சில் ஏற வந்த பயணிகளையும் தனியார் பஸ் புரோக்கர்கள் கையை பிடித்து இழுத்து தனியார் பஸ்சுக்கு வருமாறு அழைத்தனர்.

    இதனை விமலன் தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் சேர்ந்து விமலனை தாக்கினர்.அங்கிருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே அரசு பஸ்சை மடக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் விமலனை பாட்டிலால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து விமலன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

    அதில் தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் கண்டக்டர் சேர்ந்து என்னை கொலை செய்ய முயன்றனர். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.பயணிகள் தலையிட்டதால் நான் உயிர் பிழைத்தேன்.

    என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    • போலீசார் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அருகே நிலம் பிரச்சினை காரணமாக கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் விவசாயி.

    இவருக்கு அதே பகுதி சேர்ந்த பார்த்திபன் (வயது 24), பாண்டியன் (24), பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிலம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டு கலசப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயம் ஏற்பட்ட முருகன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த 2 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடாத இருக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தனர்.

    இதன் பேரில் கலெக்டர் முருகேஷ் 3 பேரையும் குண்டர் தொடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

    இதன் பெயரில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×