என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreigner dies"

    • உடல்நல குறைபாடால் அவதிப்பட்டு வந்தார்
    • ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்

    திருவண்ணாமலை:

    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் அர்ஜுனா சோலாப்பர்க் (வயது 78). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலா பயணமாக திருவண்ணா மலைக்கு வந்தார்.

    அவர் திருவண்ணாமலை அத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். உடல்நல குறைபாடால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×