என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவரது மனைவி கவிதா (38).

    இவர் ஒண்ணுபுரம் கிராமத்தில் நாக நதி ஆற்றங்கரையில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார். கவிதா கடந்த 13-ந்தேதி ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்றார். அப்போது பாய்லர் ஒன்று வெடித்துள்ளது.

    இதில் அருகில் இருந்த கவிதாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இருந்தார்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் கவிதாவின் கணவர் சங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் கும்பல் அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஒலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று அதிகாலை பஸ்சில் வந்தவாசிக்கு திரும்பினார்.

    அதன்பின் வந்தவாசியிலிருந்து ஒலப்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல் பாதிரி இருளர் குடியிருப்பு அருகே சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை மடக்கியுள்ளனர்.

    பின்னர் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.23 ஆயிரம், செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து மணிகண்டன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • காய்ச்சலுடன் வந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், சித்தா டாக்டர் ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் காய்ச்சல் வந்த நபர்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தெரிவித்து சிகிச்சை பெற ஆலோசனை வழங்கினர்.

    மேலும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
    • கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு

    செங்கம்:

    செங்கம் நகரில் போளூர் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கடை மற்றும் வீடுகள் கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    செங்கம் மில்லத்நகர் அருகே உள்ள போளூர் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • கலெக்டரிடம் மனு
    • காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமம் உள்ளது.

    தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என கம்மவான்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் கூறுகையில், வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் கம்மவான்பேட்டை என்கிற ராணுவப்பேட்டை கிராமத்தில் 5500 மக்கள் வசித்து வருகின்றனர்.

    கம்மவான்பேட்டை கிராமம் வருவாய்த்துறையில், கம்மசமுத்திரம் கிராமத்தில் சேர்ந்துள்ளனர்.

    இதனால் எங்கள் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு தேவையான வருவாய் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற கம்மசமுத்திரம் கிராமத்திற்கு சென்று காத்திருக்கும் நிலை உள்ளது.

    எனவே கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக கம்மவான்பேட்டை கிராமத்தில் தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில் கம்மவான்பேட்டை கிராமத்தை தனிவருவாய்க கிராமமாக்க மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி சார்பில் கடந்த 6-ந்தேதி வேலூர் குமாரவேல் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    கம்மவான்பேட்டை கிராமத்தை தனி வருவாய் கிராமம் ஆக்க தொடர்ந்து காலதாமதம் செய்தால் மீண்டும் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • இருதரப்புக்கிடையே வாக்குவாதம்
    • ஆய்வுக்குப் பின் கட்டிட பணிகள் அறிவிக்கப்படும்

    செங்கம்:

    செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆனால் ஏற்கனவே கட்டிடம் இருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது.

    அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் பள்ளி கட்டிடம் கட்ட நீர்ப்பிடிப்பு பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ள தாகவும் நீர்பிடிப்பு அல்லாத இடத்தில் பள்ளி கட்டிட பணியை தொடங்க வேண்டும் என கூறிவந்தனர்.

    இந்நிலையில் நீர்பிபடிப்பு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிடப் பணிகள் தொடங்குவது குறித்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு ஒரு தரப்பினரும், பள்ளி கட்டிடம் நீர்பிடிப்பு பகுதியில் கட்டக் கூடாது என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் ஆய்வுக்குப் பின் கட்டிட பணிகள் அறிவிக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து செங்கம் தாசில்தார் முனுசாமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வட்டாட்சிய ரிடம் தெரிவித்தனர். மேலும் கரியமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட மேல்கரி யமங்கலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இந்த பணியை துவங்க வேண்டும் எனவும் எதிர் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். நீர்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட கூடாது எனவும் ஆய்வுக்குப் பின் தொடர்ந்து பணிகள் குறித்து அறிவிக்கப்படும் என கூறி தாசில்தார் அங்கிருந்து சென்றார். நீர்ப்பிடிப்பு பகுதி என கரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சான்றளித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து இருதரப்பினர் கோரிக்கை களை ஆராய்ந்து நீர் பிடிப்பு இல்லாத பகுதியில் பள்ளி கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த ஆய்வினை தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை மாணவர்களுடன் அமர்ந்து தாசில்தார் முனுசாமி சத்துணவு சாப்பிட்டு பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    • வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தின் ஏரியில் லாரி மற்றும் டிராக்டர் மூலம் மொரம்பு மண் கடத்துவதாக சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மேலும் சப் கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் முள்ளிண்டிரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்ற போது லாரியில் மொரம்பு மண் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையொடுத்து சப் கலெக்டர் தனலட்சுமி மொரம்பு மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் போளூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வருகிற மே மாதம் 29-ந்தேதி வரை ராபி 2022-23-ம் ஆண்டிற்கு பருவத்திற்கு உளுந்து கொள் முதல் செய்யப்பட உள்ளது.

    மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.66- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத் தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், சிட்டா, அடங் கல் ஆகியவற்றின் நகலுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • இணை ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டது
    • 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் இருந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள் ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் கோவிலின் பின்பு றம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட் சக்கணக்கான பக்தர்கள் திரு வண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறைவடைந்த பின்னர் ஒரு வாரத்திற்குள் அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்.

    அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பா தையில் அஷ்டலிங்ககோவில் களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750-ம், 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டி யல் காணிக்கையாக பெறப் பட்டது.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேட்டவலம்:

    வேட்டவலம் அடுத்த சின்ன ஓலைப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 59), தொழி லாளி. இவரது மனைவி ரேவதி (45). இவர்களது பேரன் தயாநிதி.

    ரேவதிக்கும், தயாநிதி க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை ஏழுமலை மோட் டார் சைக்கிளில் ஆவூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    சிகிச்சை முடிந்து சின்ன ஓலைப்பாடி கிராமத்திற்கு திரும்பினர். சின்ன ஓலைப்பாடி கூட்ரோடு வளைவில் திரும் பிய போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஏழுமலை ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதில் ஏழுமலை, ரேவதி, தயாநிதி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் ரேவதி பலத்த காயமடைந்து சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டயர் வெடித்து விபரீதம்
    • பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி மீட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி சுற்றி பல கிராமங்கள் இந்த கிராமங்களில் விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை வெட்டி செய்யாறு சக்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    வந்தவாசி அடுத்த கண்டராயபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நன்கு வளர்ந்துள்ள கருவுகளை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    வெங்கடேசனின் கல்லூரி நண்பர்கள் குமார், வினோத், வேல்முருகன், ஆகியோரும் டிராக்டரில் பயணம் செய்தனர்.

    எறும்பூர் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது தாறுமாறாக ஓடிய டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் அமர்ந்திருந்த குமார் கரும்புகளுக்கிடையே மாட்டிக் சிக்கி கொண்டார்.

    இது குறித்து வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி கரும்புக்கிடையே அடியில் சிக்கி கிடந்த குமாரை மீட்டனர்.

    காயமடைந்த குமாரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மற்றவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    • மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபரை 3 வருடமாக காதலித்து வந்ததாக தெரிவித்தார்.
    • சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவிக்கு நேற்று முன்தினம் உடல் நலம் சரியில்லாமல் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது தாயார் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து டாக்டர்கள் சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். அவர் மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரை 3 வருடமாக காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் சந்தித்ததாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை தேடி வருகின்றார்.

    ×