என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
- கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு
செங்கம்:
செங்கம் நகரில் போளூர் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கடை மற்றும் வீடுகள் கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
செங்கம் மில்லத்நகர் அருகே உள்ள போளூர் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






