செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபரை 3 வருடமாக காதலித்து வந்ததாக தெரிவித்தார்.சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
Published on

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவிக்கு நேற்று முன்தினம் உடல் நலம் சரியில்லாமல் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது தாயார் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். அவர் மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரை 3 வருடமாக காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் சந்தித்ததாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com