என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்மவான்பேட்டையை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்
- கலெக்டரிடம் மனு
- காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமம் உள்ளது.
தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என கம்மவான்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் கூறுகையில், வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் கம்மவான்பேட்டை என்கிற ராணுவப்பேட்டை கிராமத்தில் 5500 மக்கள் வசித்து வருகின்றனர்.
கம்மவான்பேட்டை கிராமம் வருவாய்த்துறையில், கம்மசமுத்திரம் கிராமத்தில் சேர்ந்துள்ளனர்.
இதனால் எங்கள் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு தேவையான வருவாய் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற கம்மசமுத்திரம் கிராமத்திற்கு சென்று காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக கம்மவான்பேட்டை கிராமத்தில் தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில் கம்மவான்பேட்டை கிராமத்தை தனிவருவாய்க கிராமமாக்க மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி சார்பில் கடந்த 6-ந்தேதி வேலூர் குமாரவேல் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
கம்மவான்பேட்டை கிராமத்தை தனி வருவாய் கிராமம் ஆக்க தொடர்ந்து காலதாமதம் செய்தால் மீண்டும் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.






