என் மலர்
திருவண்ணாமலை
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர்.

இவர்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் பொது மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். இதையறிந்த தனியார் பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.
- கேக் வெட்டி கொண்டாடினர்
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் போலீசார் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு மகளிர் போலீசாரை வாழ்த்தி பேசினார். விழாவில் ஆயுதப்படையில் பணியாற்றும் ரேஷ்மா என்பவர் கேக் வெட்டி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்களை டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார். இதில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பணிபுரியும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருகை அதிகரிக்க நடவடிக்கை
- 80 பேர் பயனடைந்தனர்
போளூர்:
ஜவ்வாது மலையில் காட்டுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மழை காலங்களில் மாணவர்கள் வருகை அதிகரிக்க முதல் முறையாக வெப்ப ஆடை (ரெயின் கோர்ட்) நேற்று வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த வெப்ப ஆடை ஏற்கனவே மலைவாழ் பகுதியில் வாழும் மாணவர்களுக்கு கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட பண்டி ரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று 80 மாணவர்களூக்கு வெப்ப ஆடை வழங்கப்பட்டது.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
செய்யாறு:
வெம்பாக்கம் ஒன்றியத்தில்.கனிகிலிப்பை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய சிமெண்டு சாலை, பூனை தாங்கல் ஊராட்சி சேனியநல்லூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை, மாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான கட்டிடம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு தலைமை வகித்தார்.வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து வைத்தார்.
இதில் மாவட்டஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜே.கே. சீனிவாசன், சங்கர், தினகரன், ஞானவேல், திமுக நிர்வாகிகள் பார்த்திபன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சாவடி தெருவை சேர்ந்த மனோகரன் மனைவி சாந்தி (வயது 60) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததார் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சாந்தி தொடந்த சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் சாந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- பஸ்சை நிறுத்தத்தில் நிறுத்தாததால் தகராறு
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போக்குவரத்து பணிமனையில் வாழியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி டிரைவராகவும் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர்.
ஆரணியிலிருந்து முனியன்குடிசை கிராமத்திற்கு செல்லும் பஸ்சில் நேற்று பணியில் இருந்தனர்.
ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சிறுபாலம் பணி நடைபெறுவதால் பாளையஏகாம்பர நல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே அரசு பஸ் நிறுத்தபட்டதாக தெரிகின்றன.
மேலும் அதே இடத்தில் தனியார் மினி பஸ் நிறுத்தபட்டுள்ளன. தனியார் பஸ் கண்டக்டர் மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகி யோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் இருவரையும் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அரசு பஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர்.
கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ேமாகன்தாசை தேடி வருகின்றனர்.
- குடுகுடுப்பைக்காரர்களிடம் விசாரணை
- 6½ பவுன் நகை அபேஸ்
ஆரணி:
ஆரணி அடுத்த துந்தரீ கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர்க ளுக்கு 2 மகன்கள். ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் கட் டிட மேஸ்திரி ஆக உள்ளார். சந்திரனுக்கு மனநலம் பாதிப்புஏற்பட்டதாக கூறப்ப டுகிறது.
இதனால் அவர் வீட் டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பகலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் குடுகுடுப்பைக்காரர் போல வந்திருந்தார். அந்த நபர், உன் கணவர் பெயர் சந்திரன். அவர் மனநலம் பாதித்துள்ளார்.
உங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொரு வர் உங்களுடன் இருந்து வரு கிறார் என சொல்லவே அமுதாவும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது உனது கண வரை நல்லநிலையில் குணப்ப டுத்துவேன். அதற்கு சிறிது பணம் செலவாகும் உன்னி டம் எவ்வளவு நகை பணம் உள்ளது என கேட்டுள்ளார். அதனை கொடு நான் இரட் டிப்பாக தருகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.
இதனால் தன் கணவன் நல மாக வேண்டும் நான் கொடுக்கும் பணம் இரட்டிப்பாகும் என்ற அற்புத ஆசையால் தன்னிடம் இருந்த 6½ சவரன் தங்க நகைகளையும் ரூ.3 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த மர்ம ஆசாமி ஒரு மையை அமுதா நெத்தியில் வைத்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
சுயநினைவு அடைந்த அமுதா எழுந்து பார்க்கும் போது தன்னிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதை உணர்ந் தார். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து அவரை தேடினார். ஆனால் அந்த நபர் தப்பிச்சென்று விட் டார்.
இது குறித்து அவர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் அமுதாவிடம் குடுகுடுப்பைகாரர் போல்வேடமிட்டு வந்தவரின் அடையாளங்கள் குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள குடுகுடுப்பை காரார்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா க்களை தொடர்ந்து ஆய்வு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
- உதவி கலெக்டர் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமாலம் அடுத்த புதூர் கொல்ல மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கவிதா (வயது 28). இவளுக்கு கவின் (2½)என்ற மகன் உள்ளார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவிதாவின் தாயார் அம்பிகா கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கவிதாவுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் வேலூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
- புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை -போளூர் சாலையில் தீபமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கியது. இதையொட்டி காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மண்டல பூஜைகள் நிறைவையொட்டி நேற்று பச்சையம்மன் மன்னார்சாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடந்தது.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவில் உள்பிரகாரத்தில் சுற்றி கொண்டு வரப்பட்டு அம்மனுக்கும், மன்னார்சாமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் நா.பழனி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- திடீரென உடல் நலம் பாதிப்பு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை
கலசபாக்கம் அடுத்த மேப்பத்துறை கிராமம் பேங்க் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி தமிழரசி (வயது 26) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் தமிழரசி மீண்டும் கர்ப்பமானார், நிறைமாதகர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் அவருக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தனர் இந்த நிலையில் தமிழரசிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்து விட்டார்.
இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் இது சம்பந்தமாக முறையான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் தமிழரசி இறந்து உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர்.
பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரிய கல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.
வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். இது குறித்து வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40). இரவது மகன் சக்திவேல் (15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். காரில் சக்திவேல், காமாட்சி, செல்வம் (42), சஞ்சய் (13) ஆகியோர் சென்றனர்.
காரை இளையராஜா (28) ஓட்டி சென்றார். கோளாப்பாடி அருகே கார் சென்ற போது கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்வம், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவண்ணாமலையில் ரூ.73 லட்சம் கொள்ளை வழக்கில் நடவடிக்கை
- ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கடந்த மாதம் கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.எந்திரங்களை கும்பல் உடைத்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி ஏற்கனவே 5 பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் திஜாரா தாலுகா ஜவாந்திகுர்த் பகுதியை சேர்ந்த சிராஜுதீன் என்பவரை கர்நாடகா மாநில எல்லையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொள்ளை யடித்த பணத்தை எடுத்துச்சென்ற கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த குர்ஷித் என்பவரின் மகன் வாஹித் (வயது 36) அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று வாஹித்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவரை போலீசார் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலைக்கு வாஹித்தை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதில் கைதேர்ந்தவரும். 4 ஏ.டி.எம். எந்திரங்களையும் இவர் உடைத்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து கியாஸ் வெல்டிங் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்றும் பணம் முழுமையாக கைபற்றபட வில்லை.
மேலும் சிலரை கைது செய்தால் தான் பணம் பறிமுதல் செய்ய முடியும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பந்தமாக தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






