என் மலர்
திருவண்ணாமலை
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செங்கம்:
செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனு பாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு இளநீர், பால், தேன் உள்பட மூலிகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபா ராதனை நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் உள்ள மூலவர்களான ரிஷபேஷ்வரர், அனுபாம்பிகை, வள்ளி தெய்வானை சமேத முருக ப்பெருமான், நவகிரகங்கள் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 71 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் 125-ம்ஆண்டு காளைவிடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 250 காளைகள் பங்கேற்று ஓடியது.
இதில் வேகமாக ஓடி முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 71 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன் காளைவிடும் திருவிழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர், நாட்டாண்மை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கண்ணமங்கலம்போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளை விடும் விழாவில் முன்னாள் எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளைச் விழாக்குழுவினர் இளைஞர்கள், பொது மக்கள் செய்திருந்தனர்.
- மின் இணைப்பை பழுது பார்த்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அருகே செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தேவராஜ் (வயது 35) டிராக்டர் டிரைவர். இவர் நேற்று மின்கம்பத்தில் ஏறி வீட்டிற்கு மின் இணைப்பை பழுது பார்த்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இடது கை செயலிழந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக போளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்.
- கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது
- சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் நடைபெற்று வந்த மாட்டு வாரச்சந்தை கொரோனா தொற்றினால் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தன.
இவை நேற்று முதல் மல்லவாடி சந்தை மேட்டு பகுதியில் தொடங்கியது. சந்தை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகின்றன. இந்த சந்தையில் மாடு, ஆடு, கோழி விற்பனை மற்றும் காய்கறிகள் உட்பட பல்வேறு விதமான கடைகளும் இங்கு வைக்கப்பட்டு வியாபாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் நேற்று முதல் தொடங்கியதால் சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒரு கன்று குட்டியும், 2-வது பரிசாக ஆட்டுக்குட்டியும், 3-வது பரிசாக கோழியும் வழங்கப்பட்டன.
- போலீசார் விசாரணை
- யார்? என்று அடையாளம் தெரியவில்லை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்புறம் இருந்த கழிவு நீர் குட்டையில் ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் குட்டையில் இறந்து கடந்த பிணத்தை வெளியே எடுத்து பார்த்தபோது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவருக்கு சுமார் 37 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.
பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது உடைய வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத இரண்டாவதாக ஒரு வாலிபர் அதே குட்டையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.
இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் இறந்த நபர் முன்விரோதம் காரணத்தால் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இங்கு போட்டு விட்டு சென்று உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் மர்மமான முறையில் இறந்த கிடப்பது சந்தேகத்தி ற்குரியதாக உள்ளது. இதனை போலீசார் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வந்து இரவு நேரங்களில் லாரியில் வந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தங்கி விடுகின்றனர். இப்பகுதியில் பலமுறை கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது மர்மமான முறையில் வாலிபர்கள் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- விவசாயிகள் குற்றச்சாட்டு
- 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.
கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
- அறுவடைக்கு தயாராக இருந்த 1200 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்
- நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் திடீரென வேகக் காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது.நாட்டேரி, பிரம்மதேசம், தென்னம்பட்டு, புகை சமுத்திரம், இருமரம், சிறுவஞ்சி பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிகள் வேகக் காற்றினால் ஆலங்கட்டி மழையினாலும் கீழே சாய்ந்து நெல்மணிகள் உதிர்ந்தது.
இதனால் சராசரியாக ஏக்கருக்கு 30 மூட்டை என்றால் நெல்மணிகள் உதிர்ந்ததினால் 15 மூட்டை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேளாண்மை மற்றும் வருவாய் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நயனக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெருமாள், சரவணன், ராமச்சந்திரன், கோவிந்தராஜ், தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணை செயலாளர் ரேடியோ ஆறுமுகம், மாணவரணி துணைத் தலைவர் உஷா நாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, வழக்கறிஞர் பிரிவு சஞ்சீவி ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு
- 9,500 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைகிறது
செங்கம்:
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
குப்பநத்தம் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் செங்கம் அருகே உள்ள 47 ஏரிகள் உள்பட குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு சென்றடையும். நேற்று முதல் மே மாதம் 18-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு 110 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் எனவும், 9 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் இதனால் பயனடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் செங்கம் தாசில்தார் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிவசேமன், நகர செயலாளர் அன்பழகன், கல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் உள்பட பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
- உதவி கலெக்டர் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி ரோஜா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரோஜா நேற்று முன் தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ரோஜா இறந்துள்ளதால் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் கிராம தூய்மை பணிக்காக மின்கலன் வண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அைழப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரூ.76.80 லட்சம் மதிப்பில் 29 ஊராட்சிகளுக்கு 31 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் ஞானவேல் ஜே கே சீனிவாசன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2-வது நாளாக போராட்டம்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது.
இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து நேற்று காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி 'சீல்' வைத்தனர்.
இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொக்லைன் எந்திரங்கள் அகற்றம் தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் இரவு வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






