என் மலர்

  நீங்கள் தேடியது "Girl hangs herself"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்
  • போலீசார் விசாரணை

  அரக்கோணம்:

  நெமிலி அடுத்த குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35) மலையில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார்.

  இவரது மனைவி பாரதி (30), இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  2 வயதில் கவிமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

  கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் மீண்டும் தம்பதிக்குயிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து பாரதியி்ன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா பேட்டை அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.

  பாரதிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரிஷ் யாதவ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் பாரதியின் பெற்றோர் தங்களது மகளை அடித்து கொலை செய்து பின்பு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக பாணாவரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
  • உதவி கலெக்டர் விசாரணை

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி ரோஜா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் ரோஜா நேற்று முன் தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

  திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ரோஜா இறந்துள்ளதால் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

  ×