என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெம்பாக்கம்- செய்யாறு பகுதியில் திடீர் ஆலங்கட்டி மழை
- அறுவடைக்கு தயாராக இருந்த 1200 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்
- நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் திடீரென வேகக் காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது.நாட்டேரி, பிரம்மதேசம், தென்னம்பட்டு, புகை சமுத்திரம், இருமரம், சிறுவஞ்சி பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிகள் வேகக் காற்றினால் ஆலங்கட்டி மழையினாலும் கீழே சாய்ந்து நெல்மணிகள் உதிர்ந்தது.
இதனால் சராசரியாக ஏக்கருக்கு 30 மூட்டை என்றால் நெல்மணிகள் உதிர்ந்ததினால் 15 மூட்டை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேளாண்மை மற்றும் வருவாய் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story