என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Release of water in the dam"

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு
    • 9,500 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைகிறது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    குப்பநத்தம் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் செங்கம் அருகே உள்ள 47 ஏரிகள் உள்பட குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு சென்றடையும். நேற்று முதல் மே மாதம் 18-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு 110 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் எனவும், 9 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் இதனால் பயனடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் செங்கம் தாசில்தார் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிவசேமன், நகர செயலாளர் அன்பழகன், கல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் உள்பட பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×