search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Machine theft"

    • திருவண்ணாமலையில் ரூ.73 லட்சம் கொள்ளை வழக்கில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கடந்த மாதம் கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.எந்திரங்களை கும்பல் உடைத்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி ஏற்கனவே 5 பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் திஜாரா தாலுகா ஜவாந்திகுர்த் பகுதியை சேர்ந்த சிராஜுதீன் என்பவரை கர்நாடகா மாநில எல்லையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கொள்ளை யடித்த பணத்தை எடுத்துச்சென்ற கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த குர்ஷித் என்பவரின் மகன் வாஹித் (வயது 36) அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் அங்கு சென்று வாஹித்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவரை போலீசார் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலைக்கு வாஹித்தை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதில் கைதேர்ந்தவரும். 4 ஏ.டி.எம். எந்திரங்களையும் இவர் உடைத்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து கியாஸ் வெல்டிங் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்றும் பணம் முழுமையாக கைபற்றபட வில்லை.

    மேலும் சிலரை கைது செய்தால் தான் பணம் பறிமுதல் செய்ய முடியும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பந்தமாக தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×