என் மலர்
நீங்கள் தேடியது "Opposition to the construction of a school building"
- இருதரப்புக்கிடையே வாக்குவாதம்
- ஆய்வுக்குப் பின் கட்டிட பணிகள் அறிவிக்கப்படும்
செங்கம்:
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் ஏற்கனவே கட்டிடம் இருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது.
அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் பள்ளி கட்டிடம் கட்ட நீர்ப்பிடிப்பு பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ள தாகவும் நீர்பிடிப்பு அல்லாத இடத்தில் பள்ளி கட்டிட பணியை தொடங்க வேண்டும் என கூறிவந்தனர்.
இந்நிலையில் நீர்பிபடிப்பு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிடப் பணிகள் தொடங்குவது குறித்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு ஒரு தரப்பினரும், பள்ளி கட்டிடம் நீர்பிடிப்பு பகுதியில் கட்டக் கூடாது என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் ஆய்வுக்குப் பின் கட்டிட பணிகள் அறிவிக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து செங்கம் தாசில்தார் முனுசாமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வட்டாட்சிய ரிடம் தெரிவித்தனர். மேலும் கரியமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட மேல்கரி யமங்கலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இந்த பணியை துவங்க வேண்டும் எனவும் எதிர் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். நீர்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட கூடாது எனவும் ஆய்வுக்குப் பின் தொடர்ந்து பணிகள் குறித்து அறிவிக்கப்படும் என கூறி தாசில்தார் அங்கிருந்து சென்றார். நீர்ப்பிடிப்பு பகுதி என கரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சான்றளித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து இருதரப்பினர் கோரிக்கை களை ஆராய்ந்து நீர் பிடிப்பு இல்லாத பகுதியில் பள்ளி கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வினை தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை மாணவர்களுடன் அமர்ந்து தாசில்தார் முனுசாமி சத்துணவு சாப்பிட்டு பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார்.






