என் மலர்
திருவண்ணாமலை
- கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது
- 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாம லைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகும். அன்றைய தினம் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். அதன்படி கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
ஒவ்வொரு பவுர்ணமி முடிந்த பின்னரும் கோவில் உண்டி யல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி இந்தமாதம் பவுர் ணமிமுடிவடைந்ததையொட்டி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உபகோவில் உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்கள் அருணாச லேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு இணை ஆணையர் குமரேசன் (பொறுப்பு) முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.
இதில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221-ஐ பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
- ஆரணி கிராமங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கைது
- 5 தனிப்படை தீவிரம்
ஆரணி:
ஆரணி சுற்றியுள்ள மலை மற்றும் கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனையில் இதுவரை யில் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் கண்ணமங்கலம் அருகே நாமக்கார மலையில் சோதனையில் ஈடுபட்ட போது சாராயம் காய்ச்சிய 5பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையொடுத்து இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் குழுக்களாக தனிப்படை அமைத்து பூசிமலைக்குப்பம் காப்பு காடு அத்திமலைபட்டு காரமலை மற்றும் கண்ணமங்கலம் நாமகார மலை சந்தவாசல் படவேடு உள்ளிட்ட பகுதிகளில் 5 தனிப்படை தனிதனி குழுக்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மலை ப்பகுதிகளில் உள்ள புதர்களில் நிலசரிவுகளில் கள்ள சாராயம் காய்ச்சி வருகின்றார்களா எனவும் டிரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.
- போதைப் பொருள் விற்றது குறித்து போலீசாரிடம் தகவல் கூறியதால் முன் விரோதம்
- பழிக்கு பழி வாங்க வெட்டியதாக வாக்குமூலம்
திருவண்ணாமலை:
வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மாற்றுத்திறனாளியான இவரை நேற்று முன்தினம் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டிவிட்டு தப்பினர்.
போதைப் பொருள் விற்றது குறித்து போலீசாரிடம் தகவல் கூறியதால் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து வரதனின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மகன்கள் அஜித் (வயது22), நாகமணி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதன், அவரது கூட்டாளிகள் விஜய் என்பவரை வெட்டி கொலை செய்ததாகவும் அதற்குப் பழிக்கு பழிவாங்க நான் வெட்டினேன் என்று அஜித் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்:
கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் அகரம் சிப்பந்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவ ருக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இதற்காக அவரது தாய் மல்லிகா (45), மணமகன் சதீஷ் குமார் இருவரும் திருமண வேலையாக திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றனர்.
அங்கிருந்து நாயுடுமங்கலம் நோக்கி பைக் கில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வடபுழுதிவூர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது, பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி என்பவர் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பைக்கில் வந்தார்.
இந்த பைக்குகள் இரண்டும் நேருக்கு நேர் மோதியது. மேலும், அவ்வழியே துரைமுருகன் என்பவர் ஓட்டிவந்த பைக்கும் நிலை தடுமாறி இவர்கள் மீது மோதியது. இதில் 3 பைக்குகளும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது.
இதில், சதிஷ்குமாரின் தாய் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் ராஜேஷ்குமார், துரைமுருகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தில் மல்லிகா இறந்ததால் சதீஷ்குமாரின் திருமணம் நின்றுபோனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லட்சுமி (40) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லட்சுமி தனது மகள்களுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதேபோல் செல்வராஜூம் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் ராட்டிணமங்கலம் இ.பி.நகர் கூட்ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணி பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்றார்.
அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அந்த பகுதியில் உள்ள வர்கள் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த ரமணி உறவினர்கள் குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர்.
மேலும் இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறிந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10-வது நாளாக நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி சிறுவர்கள் கைகளில் இலை, தழைகள், மரக்கன்றுகளை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குழந்தைகள் தெரிவித்தனர்.
இந்த தொடர் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன், எஸ்.பலராமன், வக்கீல் எஸ்.அபிராமன் உதயகுமார், சாமிக்கண்ணு, புனல் காடு செல்வம், முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் வசதிக்காக உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை நேரடியாக கண்டு தரிசிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு முதல் நடை அடைக்கும் நேரம் வரை உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் அனைத்து வழிபாடுகளையும், பூஜைகளையும், அலங்காரத்தையும் நேரடியாக இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதற்காக உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கூறியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தி வழிபாடுகளை நேரில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://youtube.com/@arunachaleswarartemple livestrea என்ற இணைய தள முகவரி வழியாக காணலாம். மேலும் தமிழ்நாட்டின் பிரசித்த பெற்ற கோவில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ள Thirukkoil என்ற செல்போன் செயலியை பயன்படுத்தியும் நேரடி ஒளிபரப்பை காணும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
உற்சவ மூர்த்தி வழிபாடு நேரடி ஒளிபரப்புக்கு பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து கோவில் விழாக்கள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளையும் அறநிலையத்துறை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் முகவர்கள் புகார்
- பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்
திருவண்ணாமலை:
செய்யாறு பகுதியில் தனி யார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தநிதி நிறுவனத்தில்செய்யாறு, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி சேமிப்பு திட்டம், பொங்கல் சேமிப்பு திட்டம், தங்கம் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தனர்.
அந்த நிறுவனம் பொது மக்களிடம் பணத்தை பெற்றது. திடீரென அந்தநிறுவனம் மூடப்பட்டது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
செய்யாறு பகுதியில் செயல் பட்டு வந்த நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம்.
அப்போது அந்த நிதி நிறுவ னத்தை சேர்ந்தவர்கள் எங் களை தொடர்பு கொண்டு பிறரையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்குமாறு தெரிவித்தனர்.
மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தில் 15 பேரை முதலீடு செய்ய வைத்தால் நீங்கள் ஒரு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றனர்.
அதை நம்பி நாங்களும் முகவர்களாக செயல்பட்டு ஏராளமான பொதுமக்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தோம்.
திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்போது நாங் களும் எங்கள் மூலம் பணம் செலுத்திய பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களிடம் பணம் கொடுத்தவர் கள் பணத்தைக் கேட்டு தக ராறு செய்கின்றனர். நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம்.
செய்யாறு, வந்தவாசி உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் முத லீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
எனவே மக்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி நிறுவ னத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
கலசபாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தேவன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி கொண்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றார்.
சுற்றுலா முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
அதில் உள்ள பொருட்கள் களைந்து இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தேவன் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
- 7ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கிராம் தங்க தாலியை எடுத்து சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பைபாஸ் சாலை அருகே முத்துராமலிங்க தேவர் நகர் பகுதியில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதில் தினமும் கோவில் இரவு நடை சாத்தப்படும். அதன்படி நேற்று இரவு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலை கோவில் நிர்வாகி வந்து பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த 7ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் பூட்டு உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெம்பாக்கம்:
வந்தவாசி நல்லூர் சேர்ந்தவர் வரதன் (வயது 42) மாற்றுத்திறனாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் தங்கி உள்ளார்.
இன்று காலை இயற்கை உபாதை கழித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வரதனை சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை வருவதை பார்த்த மர்ம கும்பல் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வரதனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமாக வரதனை கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.






