என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலசபாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    கலசபாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    கலசபாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தேவன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி கொண்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றார்.

    சுற்றுலா முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    அதில் உள்ள பொருட்கள் களைந்து இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தேவன் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×