என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
- 7ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கிராம் தங்க தாலியை எடுத்து சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பைபாஸ் சாலை அருகே முத்துராமலிங்க தேவர் நகர் பகுதியில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதில் தினமும் கோவில் இரவு நடை சாத்தப்படும். அதன்படி நேற்று இரவு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலை கோவில் நிர்வாகி வந்து பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த 7ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் பூட்டு உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.






