என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது
    • தனிப்படை அமைத்து தேடிவந்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர், பக்தவாச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 35) மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகி ஜெயந்தி (30) என்ற மனைவியும் சசிகலா (9), கிஷோர் (5) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சிறுமி சசிகலாவுக்கு நேற்று முன்தினம் 9-வது பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்தார்.

    இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியில் வசிக்கும் தனது மாமியார் ஜோதியம்மாவை அழைத்துள்ளார்.

    இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு சிறுமி சசிகலாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதை தொடர்ந்து, விழாவுக்கு வந்த ஜோதி அம்மாள் உள்பட அனைவரும் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.

    இரவு சுமார் 11 மணியளவில் ஜட்டியுடன் மாடிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஜோதியம்மாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சி அடைந்த ஜோதியம்மா கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடி வந்த பிரபு மர்ம நபரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தார்.

    அப்போது கொள்ளையன் தன் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபுவை வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த பிரபு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அதேபோல் இதற்கு முன்னதாக வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கும் ஜட்டியுடன் வந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த ரங்கன், மர்ம நபரை மடக்கி பிடிக்க முயன்றபோது கையில் வைத்திருந்த கத்தியால் ரங்கனையும் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த ரங்கன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்விரதம் காரணமாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல் நிசார் (வயது 26 )அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஸ்( 27) இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இதில் காயமடைந்த அப்துல்நிசாரரின் தந்தை அப்துல் காதர் (55 )மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்விஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன் நகரை சேர்ந்த தனசேகர் சூர்யா (27),உறவினரான ஜன்னத் நகரை சேர்ந்த முபாரக்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் அதன் பெயரில் தர்பீஸ் உட்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்

    • கிரி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மக்கள் கோரிக்கை மனு

    செங்கம்,

    செங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிறைவு நாள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டார்.

    கடந்த 19-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி செங்கம் வட்டத்தில் உள்ள செங்கம், இறையூர், பாய்ச்சல், மேல்பள்ளிப்பட்டு மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட 5 உள்வட்டங்களுக்கு நடைபெற்றது.

    ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று புதுப்பாளையம் உள்வட்டத்தில் உள்ள கிராமப் பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த நிகழ்வினை தொடர்ந்து விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டார். செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் தரப்பில் தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்கத் பிரதிநிதிகள் பேசினர். ஜமாபந்தி நிகழ்வில் கோரிக்கை மனுக்கள் அளித்த பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்வில் செங்கம் தாசில்தார் முனுசாமி, நகர செயலாளர் அன்பழகன் முன்னாள் பேரூராட்சி தலைவர், சென்னம்மாள் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, துணை தாசில்தார்கள் தமிழரசி, லதா, வருவாய் ஆய்வாளர்கள் சரண்ராஜ், ஞானவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், கமலஹாசன், சந்திரகுமார் உள்பட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.46 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    ஆரணி சப்-கலெக்டர் தனலட்சமி தலைமை தாங்கினார். தாசில்தார் மஞ்சுளா முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் புஷ்பா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன், தி.மு.க. நகர செயளர் ஏ.சி.மணி, ஓன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் பெறப்பட்ட மொத்தம் 987 மனுக்களில், 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படடது.

    மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.

    இதில் ரூ.45 லட்சத்து 92 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன், ஆரணி நகர செயலாளர் ஏ.சி.மணி, ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஓன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.

    • மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர்
    • லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

    வெம்பாக்கம்,

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சக்திவேல். இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    ரூ.2 ஆயிரம் லஞ்சம்

    இவர் ஆலந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் மேல்பகுதி வழியாக மின் கம்பி செல்கிறது.

    அதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டிடப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டின் மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி பாதையை மாற்றி அமைக்க, சக்திவேல் வெம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் அஜித்பிரசாத்தை தொடர்பு கொண்டார்.

    அப்போது திட்ட மதிப்பீடு தொகை ரூ.37 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று உதவி பொறியாளர் கூறிஉள்ளார்.

    அதன்படி சக்திவேல் மின்வாரியம் பெயரில் ரூ.37 ஆயிரத்துக்கான தொகையை டி.டி.யாக எடுத்துக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உதவிப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் 10 பேர் வீட்டின் மீது செல்லும் மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர். அப்போது மீண்டும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டனர்.

    சக்திவேல் பணம் தர மறுக்கவே, மின்வாரிய அதிகாரி வேலையை தொடர்ந்து செய்ய மறுத்தார்.

    இதனால் மனமுடைந்த சக்திவேல், உதவிப் பொறியாளர் அஜித் பிரசாத் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம்கொடுத்து, அதை உதவி பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

    ஜெயிலில் அடைப்பு

    அதன்படி அவரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவிப்பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையை தொடர்ந்து மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடியினர் மயானத்துக்கு பாதை வசதி கோரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லை. எனவே மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    • பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் விசாரணை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தச்சம்பட்டு பகுதியில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.

    திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாரதி உட்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஜமாபந்தியில் காட்டாம்பூண்டி, சின்னகல்லப்பாடி, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பழையனூர், கண்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

    பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை மேற்கொண்டார். மேலும் கிராமங்களின் வருவாய் ஆவணங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினார்.

    • தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
    • மீட்கப்பட்ட காளையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமாக 2 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் மாடுகளை நிலத்தில் கட்டி விட்டு சென்றார். பின்னர் அதில் இருந்த மாடு ஒன்று கயிற்றை அவிழ்த்துக் கொண்டு அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது.

    மாட்டின் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. மாட்டை மீட்க முயற்சி செய்தனர்.

    முடியாததால் வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டை கயிற்றின் மூலம் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட காளையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது
    • இயற்கை பாதிக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி மக்களில் சிலர் தலைகீழாக நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவரது மனைவி ராஜகுமாரி(20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.

    கடந்த 18-ந் தேதி ராஜகுமாரி வீட்டிலிருந்து மாயமானர். இதுகுறித்து அவரது கணவர் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ராஜகுமாரியின் பிணமாக மிதந்து கிடப்பதாக தெள்ளார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளார் போலீசார், ராஜகுமாரி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்

    திருவண்ணாமலை:

    பழங்குடியின தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம் செயல்ப டுத்தப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    அண்ணல் அம்பேத்கர்' பிசினஸ் சாம்பியன்ஸ்' திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பட் டியல் இனத்தவர், பழங்குடி யினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும் 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம்.

    அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியமாக பெறலாம். வங்கிக் கடன் வட் டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்கு டியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் தொடங்க விரும்பு வோரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வித் தகுதி இல்லை. 55 வயதுக்குட்பட்டோர், உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்பட கூடிய தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்கள் தொடங்குவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். சுய முதலீட்டில் தொழில் தொடங்கினாலும் இத்திட்டம் மூலம் மானியம் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www. msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×