என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bull fell into a well"

    • தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
    • மீட்கப்பட்ட காளையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமாக 2 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் மாடுகளை நிலத்தில் கட்டி விட்டு சென்றார். பின்னர் அதில் இருந்த மாடு ஒன்று கயிற்றை அவிழ்த்துக் கொண்டு அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது.

    மாட்டின் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. மாட்டை மீட்க முயற்சி செய்தனர்.

    முடியாததால் வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டை கயிற்றின் மூலம் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட காளையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    ×