என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயானத்துக்கு பாதை வசதி கேட்டு பழங்குடியினர் மனு
- ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
- வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடியினர் மயானத்துக்கு பாதை வசதி கோரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லை. எனவே மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
Next Story