என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 200 கிராம் கஞ்சாவை பறிமுதல்
    • போலீசார் மடக்கி பிடித்தனர்

    சேத்துப்பட்டு:

    தேசூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாய்ராம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈசாகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் தேசூரை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் துரை முருகன் (வயது 23), ரமேஷ் என்பவரின் மகன் நந்தகுமார் (26) ஆகிய இருவரும் போலீசை பார்த்ததும் ஓடினர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து: அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் அக்னி வசந்த விழா தொடக்கம்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    சேத்துப்பட்டு:

    மழையூர் அடுத்த கொரசலவாடி மேட்டுகுடிசை கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையொட்டி மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் நாடகம் 10 நாள் நடக்கிறது.

    முக்கியமான விழாவான அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந் து.31அடிஉயர பனைமரத்தில் அர்ஜுனன் வேடம் அணிந்து சிவன், பார்வதியிடம் மகாபாரத போரில் வெற்றிபெறுவதற்கு தவமிருந்து வரம் பெற்ற காட்சி நடந்தது:

    இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • 5,000 வாழை மரங்கள் சேதமானது
    • விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிவேகமாக சூறைக்காற்று வீசியதில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது நாசமானது.

    இதில் குறிப்பாக வேதாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவன், சேகர், ராஜேந்திரன் உள்பட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் பாதியில் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் நாசமடைந்துள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுபடுத்தும் வகையில் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாமி வீதிஉலா இன்று இரவு நடக்கிறது
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது

    திருவண்ணாமலை,

    கோடை கால விடுமுறை தொடங்கியதில் இருந்தே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

    குறிப்பாக, கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

    வரிசையில் காத் திருந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

    மேலும், ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    கூட்டம் அலைமோதிய தால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், கடந்த 4 ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி, கடந்த 2 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலச பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று இரவு சாமி வீதி உலா கலச பூஜையின் 2-ம் நாளான நேற்று காலை மற்றும் மாலையில் 1,008 கலச பூஜை நடைபெற்றது.

    அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக இன்று இரவு 8 மணி அளவில், சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.

    மேலும், சாமி சன்னதியில் நடைபெற்ற தாராபிஷேகமும் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆதி கேசவன் பகுதியை சேர்ந்த புஷ்பா, சலீம் சுமங்கலி பகுதியைச் சேர்ந்த கோபி, குரு ராம், அல்லியந்தலைச் சேர்ந்த மைதிலி, அனாக்காவூர் சேர்ந்த கோபி, ஏழுமலை ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்து அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து செய்யாறு, மோரணம், பெரணமல்லூர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின
    • விழா நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர். காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 10 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

    • 30 லிட்டர் சாராயம், பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    ஆரணி உட்கோட்ட துணை போலீஸ் சுப்பிரண்டு வி.ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து டிரோன் கேமரா உதவியுடன் பள்ளகொல்லை கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுப்படனர்.

    மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் சாராயம் கடத்தி வந்த காரமலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. பின்னர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 30 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
    • ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகின்றனர்.

    அதன்படி நேற்று 15-வது நாளாக நூதன முறையில் பாடை கட்டி அதன்மேல் பொம்மையை வைத்தும், மேலும் இரு பொம்மைக்கு மாலை அணிவித்தும் பொம்மைகளை பிணமாக பாவித்து, ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்கு குப்பை கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வருங்காலங்களில் ஏற்படும் நிகழ்வை தான் நாங்கள் இன்று போராட்டமாக மேற்கொண்டோம் என்றனர்.

    • மூலவர், அம்மனுக்கு நாளை சிறப்பு அபிஷேகம்
    • கலசாபிஷேக சிறப்பு பூஜையில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி 3 நாட்கள் நடைபெறும் 1008 கலச பூஜை விழா நேற்று தொடங்கியது.

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடைபெறுகிறது.

    அக்னி நட்சத்திரம் நாளை(29-ந்தேதி) நிறைவு பெறுவதையொட்டி 1008 கலச பூஜை விழா நேற்று காலை தொடங்கியது.சிறப்பு ஹோமங்கள் மற்றும் நான்கு கால 1008 கலச பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை,முதல் கால 1008 கலச பூஜை மற்றும் ஹோமம் பூர்ணஹுதி தீபாராதனை, உமா மகேஸ்வர பூஜை ஆகியவை நேற்று நடைபெற்றன.

    இதையடுத்து 2-வது நாளான இன்று(28-ம் தேதி) இரண்டாவது மற்றும் மூன்றாவது கால 1008 கலச பூஜை,ஹோமம் பூர்ணஹுதி தீபாராதனை, உமா மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 4-வது கால கலச பூஜை ,ஹோமம், மகா பூர்ணஹுதி தீபாராதனை, தம்பதி பூஜை நாளை(29-ம் தேதி) நடைபெற உள்ளது.இதன் பிறகு மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் மற்றும் அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமியின் வீதி உலா நடைபெறவுள்ளது.

    இளவரசு பட்டம் பெற்ற அச்சகம் சிவஸ்ரீ பி.டி ரமேஷ் குருக்கள் தலைமையில் 1008 கலசாபிஷேக சிறப்பு பூஜையில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • தகுதியானவர்களுக்கு 14-வது தவணைத் தொகை விரைவில் வழங்கப்படும்
    • வேளாண் அதிகாரிகள் தகவல்

    திருவண்ணாமலை:

    விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டத்தில் தகு தியானவர்களுக்கு 14-வது தவணை தொகை விரைவில் வழங்கப்படும் என்று வேளாண் அதிகா ரிகள் தெரிவித்தனர்.

    உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் (பி.எம். கிசான்)செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவ ணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பற்று வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-வது தவணையாக 1,24,571 பயனா ளிகளுக்கு ரூ.24 கோடியே 91 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப் பட்டது. இதையடுத்து 13-வது தவணையாக கடந்த பிப்ரவரி மாதம் 1,03,658 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 73 லட்சத்து 16ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 12-வது தவணையில் இருந்து 13-வது தவணை பெற்றவர்களை ஒப் பிட்டு பார்க்கும் போது 20,913 பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இவர்கள் தகுதியற்றவர்கள் என்று அதி காரிகள் தரப்பில் தெரிவிக் கப்படுகிறது. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு வழங்கப் படும் தொகை உரிய தகுதியு டைய நபர்களுக்கு தான் சென்றடைய வேண்டும். ஆனால் பெரிய விவசாயிகள், ஒரே வீட்டில் 2 பேர் உதவித் தொகை பெறுதல், பல்வேறு இடங்களில் நிலம் வைத்துள் ளவர்கள் உதவித்தொகை பெறுதல் போன்று ஏராள மான தகுதியில்லாத நபர்கள் உதவித்தொகை பெற்றுள்ள னர்.

    எனவே அதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை திட்டத்தில் விலக்கு பிரிவுகள் உள்ளன. அதன்படி நிறுவனத்தின் உரிமையாளர்கள், பெரு விவசாயிகள், அரசியலமைப்பில் முக்கிய பதவிகள் வகிப்ப வர்கள், ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உள் ளாட்சி அமைப்புகளில் நிரந் தர பணியாளர்கள், ஊழியர்கள், மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூ தியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்தியவர்கள், டாக்டர்கள், பொறியாளர் கள், வக்கீல்கள், பட்டய கணக்காளர்கள், வல்லுனர் கள் போன்றவர்கள் தகுதியற் றவர்களாகின்றனர். அவ் வாறு அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவருகிறது. இந்த பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    தகுதியுடையவர்களுக்கு விரைவில் 14-வது தவணை தொகை வழங்கப்படும். புதி தாக விண்ணப்பித்தவர்களின் விவரங்களும் பதிவேற் றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வந்தவாசி அருகே உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50), லாரி டிரைவர்.

    இவர், நாக்பூரில் இருந்து லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஆலைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் அவர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அங்கு சென்று காவலாளி பார்த்த போது லோகநாதன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த லோகநாதனின் உடலில் எந்தவித காயமும் இல்லை என்றும் அவர் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொ டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 மது பாட்டில்களை பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் எஸ்.வி.நகரம் மற்றும் பையூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்த எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55), பையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 2 பேர் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    ×