என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The tarabhishekam also concludes with this evening"

    • சாமி வீதிஉலா இன்று இரவு நடக்கிறது
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது

    திருவண்ணாமலை,

    கோடை கால விடுமுறை தொடங்கியதில் இருந்தே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

    குறிப்பாக, கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

    வரிசையில் காத் திருந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

    மேலும், ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    கூட்டம் அலைமோதிய தால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், கடந்த 4 ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி, கடந்த 2 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலச பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று இரவு சாமி வீதி உலா கலச பூஜையின் 2-ம் நாளான நேற்று காலை மற்றும் மாலையில் 1,008 கலச பூஜை நடைபெற்றது.

    அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக இன்று இரவு 8 மணி அளவில், சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.

    மேலும், சாமி சன்னதியில் நடைபெற்ற தாராபிஷேகமும் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    ×