பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

30 லிட்டர் சாராயம், பைக் பறிமுதல் போலீசார் விசாரணை
பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
Published on

கண்ணமங்கலம்:

ஆரணி உட்கோட்ட துணை போலீஸ் சுப்பிரண்டு வி.ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து டிரோன் கேமரா உதவியுடன் பள்ளகொல்லை கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுப்படனர்.

மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் சாராயம் கடத்தி வந்த காரமலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. பின்னர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 30 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதுசம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com