என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலச பூஜை
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலச பூஜை விழா நடந்த காட்சி.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலச பூஜை

    • மூலவர், அம்மனுக்கு நாளை சிறப்பு அபிஷேகம்
    • கலசாபிஷேக சிறப்பு பூஜையில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி 3 நாட்கள் நடைபெறும் 1008 கலச பூஜை விழா நேற்று தொடங்கியது.

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடைபெறுகிறது.

    அக்னி நட்சத்திரம் நாளை(29-ந்தேதி) நிறைவு பெறுவதையொட்டி 1008 கலச பூஜை விழா நேற்று காலை தொடங்கியது.சிறப்பு ஹோமங்கள் மற்றும் நான்கு கால 1008 கலச பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை,முதல் கால 1008 கலச பூஜை மற்றும் ஹோமம் பூர்ணஹுதி தீபாராதனை, உமா மகேஸ்வர பூஜை ஆகியவை நேற்று நடைபெற்றன.

    இதையடுத்து 2-வது நாளான இன்று(28-ம் தேதி) இரண்டாவது மற்றும் மூன்றாவது கால 1008 கலச பூஜை,ஹோமம் பூர்ணஹுதி தீபாராதனை, உமா மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 4-வது கால கலச பூஜை ,ஹோமம், மகா பூர்ணஹுதி தீபாராதனை, தம்பதி பூஜை நாளை(29-ம் தேதி) நடைபெற உள்ளது.இதன் பிறகு மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் மற்றும் அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமியின் வீதி உலா நடைபெறவுள்ளது.

    இளவரசு பட்டம் பெற்ற அச்சகம் சிவஸ்ரீ பி.டி ரமேஷ் குருக்கள் தலைமையில் 1008 கலசாபிஷேக சிறப்பு பூஜையில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×