என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police arrested one person and investigated"

    • தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது
    • தனிப்படை அமைத்து தேடிவந்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர், பக்தவாச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 35) மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகி ஜெயந்தி (30) என்ற மனைவியும் சசிகலா (9), கிஷோர் (5) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சிறுமி சசிகலாவுக்கு நேற்று முன்தினம் 9-வது பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்தார்.

    இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியில் வசிக்கும் தனது மாமியார் ஜோதியம்மாவை அழைத்துள்ளார்.

    இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு சிறுமி சசிகலாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதை தொடர்ந்து, விழாவுக்கு வந்த ஜோதி அம்மாள் உள்பட அனைவரும் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.

    இரவு சுமார் 11 மணியளவில் ஜட்டியுடன் மாடிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஜோதியம்மாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சி அடைந்த ஜோதியம்மா கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடி வந்த பிரபு மர்ம நபரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தார்.

    அப்போது கொள்ளையன் தன் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபுவை வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த பிரபு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அதேபோல் இதற்கு முன்னதாக வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கும் ஜட்டியுடன் வந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த ரங்கன், மர்ம நபரை மடக்கி பிடிக்க முயன்றபோது கையில் வைத்திருந்த கத்தியால் ரங்கனையும் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த ரங்கன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×