என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் கேமரா மூலம் ஆய்வு"

    • ஆரணி கிராமங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கைது
    • 5 தனிப்படை தீவிரம்

    ஆரணி:

    ஆரணி சுற்றியுள்ள மலை மற்றும் கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனையில் இதுவரை யில் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் கண்ணமங்கலம் அருகே நாமக்கார மலையில் சோதனையில் ஈடுபட்ட போது சாராயம் காய்ச்சிய 5பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனையொடுத்து இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் குழுக்களாக தனிப்படை அமைத்து பூசிமலைக்குப்பம் காப்பு காடு அத்திமலைபட்டு காரமலை மற்றும் கண்ணமங்கலம் நாமகார மலை சந்தவாசல் படவேடு உள்ளிட்ட பகுதிகளில் 5 தனிப்படை தனிதனி குழுக்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மலை ப்பகுதிகளில் உள்ள புதர்களில் நிலசரிவுகளில் கள்ள சாராயம் காய்ச்சி வருகின்றார்களா எனவும் டிரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

    ×